திருப்பத்தூரில் பயங்கரம்! சித்தி கொலை, சித்தப்பாக்கு சரமாரி வெட்டு - இளைஞர் சொன்ன பகீர் விளக்கம்

Tirupathur murder | திருப்பத்தூரில் சித்தியை கொலை செய்த இளைஞர் காவல்துறையிடம் கொடுத்த பகீர் வாக்குமூலத்தின் விவரம் வெளியாகியுள்ளது. சித்தப்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 8, 2025, 08:32 PM IST
  • திருப்பத்தூரில் நடந்த பயங்கரம்
  • சித்தி கொலை, சித்தப்பா மருத்துவமனையில்
  • சொந்த அக்கா மகனின் வெறிச்செயல்
திருப்பத்தூரில் பயங்கரம்! சித்தி கொலை, சித்தப்பாக்கு சரமாரி வெட்டு - இளைஞர் சொன்ன பகீர் விளக்கம் title=

Tirupathur murder News | திருப்பத்தூர் அருகே தாயை தகாத வார்த்தையால் திட்டிய சித்தப்பா மற்றும் தடுக்க வந்த சித்தியை நண்பருடன் சேர்ந்து கத்தியால் வெட்டிய சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக பிரமுகரான கைதான இளைஞரின் சித்தப்பா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அக்கா மகன் வெறிச்செயல் நடந்தது என்ன...?..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மேற்கத்தியானூர் பகுதியை சேர்ந்த தோலன் மகன் திருப்பதி (வயது45), இவர் திமுக மட்றப்பள்ளி திமுக ஊராட்சி மன்ற துணைத்தலைவராக இருந்து வரும் நிலையில் இவருக்கு வசந்தா (வயது 40) என்கிற மனைவியும் ஒருமகன், மகள் உள்ளனர். மகன், மகள் கல்லூரி படிப்பை வெளியூரில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பதி அவரது மனைவி ஆகியோர் விவசாயம் செய்து கறவை மாடுகள் வைத்து தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பதியின் வீட்டினுள் புகுந்து  திருப்பதி, மற்றும் இவரது மனைவி வசந்தா ஆகியோரின் மர்ம நபர்கள் சராமரியாக வெட்டியதில் வசந்தா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி இருந்த திருப்பதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர். பின்னர் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைகாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் ஓசூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையெடுத்து உயிரிழந்த வசந்தாவின் உடலை போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

மேலும் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் ஜோலார்பேட்டை ரயில்வை  ஜங்ஷன் பகுதியில்   இருசக்கர வாகனத்தை விட்டு அங்கிருந்து கொலையாளிகள் ஆட்டோவில் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் ஆட்டோ ஓட்டுனர் விசாரித்தபோது ஆட்டோ ஓட்டுனர் கூறுகையில் இருவரையும் வாணியம்பாடி நகராட்சி அருகே இறக்கி விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

போலீசார் சிசிடி காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்ட போது வசந்தாவின் அக்கா உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த சாந்தியின்  மகன் ரேனுகுமார் (வயது 22),  மற்றும் அவரது நண்பர் சிறுவன் கெவின் (வயது 17) ஆகியோர் கொலைச் சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

திடுக்கிடும் தகவல்

ரேணுகுமார் கொடுத்த வாக்குமூலத்தில், " எனது தந்தை வடிவேல் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ளார். எனது தாய் சாந்திக்கும், திமுக துணைத்தலைவரும், எனது சித்தப்பாவுமான திருப்பதி என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்தது. நில தகராறு பிரச்சனையும் இருந்து வந்தது. அதனால், எனது தாயை திருப்பதி சித்தப்பா அடிக்கடி அசிங்கமாக பேசி திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்து எனது நண்பருடன்  சேர்ந்து நேரில் சென்று இனிமேல் இதுபோன்று செயலில் ஈடுப்பட கூடாது என கூறினேன். அப்போது என்னுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து சித்தப்பா திருப்பதியை ரேணுகுமார் சராமரியாக வெட்டிவிட்டேன். இதனை தடுக்க வந்த சித்தி வசந்தியும் சராமரியாக வெட்டினோம்" என சொந்த அக்கா மகன் ரேனுகுமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பின்னர் திருப்பத்தூர் கிராமிய போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். திருப்பத்தூர் அருகே நிலத் தகராறில் தனது தாயை அசிங்கமாக பேசி திட்டிய சித்தப்பா மற்றும் சித்தியை அரிவாளால் வெட்டியதும், சித்தி உயிரிழந்த நிலையில், சித்தப்பா உயிர்க்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | கருவிலேயே சிதைந்த உயிர்... துடிக்கும் கர்ப்பிணி.. வேலூர் சம்பவத்தில் மேலும் வேதனை

மேலும் படிக்க | வரும் 11 ஆம் தேதி டாஸ்மாக் விடுமுறை அறிவிப்பு - கள்ளச்சந்தை விற்பனைக்கு எச்சரிக்கை..!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிaந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News