பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கெல்லாம் நாளைக்கு மட்டும் லீவ்? எங்கெல்லாம் 2 நாளும் லீவ்?

School Colleges Leave: டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுதினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 28, 2024, 08:51 PM IST
  • தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரத் தொடங்கியது.
  • இது புயலாக உருவாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கெல்லாம் நாளைக்கு மட்டும் லீவ்? எங்கெல்லாம் 2 நாளும் லீவ்? title=

School Colleges Leave Latest News Updates: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம், கடலூர் மாவட்டத்திற்கும் நாளை மட்டும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 340 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதே நேரத்தில், கடந்த 6 மணி நேரத்தில் 10 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரத் தொடங்கி உள்ளது. இருப்பினும், இது புயலாக வலுபெறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், தற்போதைய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30ஆம் தேதி காலை வடதமிழ்நாடு புதுச்சேரி கடற்கரையை ஒட்டி காரைக்கால் - மாமல்லபுரம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும். கரையை கடக்கும்போது 45-55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ. 28) மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மேலும் படிக்க | இளைஞர்களை தொழிலதிபர்கள் ஆக்கும் சூப்பர் திட்டம் - ரூ.5 கோடி வரை கடனுதவி

முன்னதாக, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது இன்று இரவுக்குள் தற்காலிக புயலாக வலுபெறும் என கூறப்பட்டிருந்தது. இந்த தற்காலிக புயல் மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என கூறப்பட்டது. தற்போது புயல் உருவாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட்டும் நாளை (நவ.29) விடுக்கப்பட்டிருந்தது. 

அதுமட்டுமின்றி, நாளை மறுதினம் (நவ. 30) ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | பள்ளி மாணவர்களே... மாதம் 1000 ரூபாய் வேண்டுமா... இந்த தேர்வை எழுதுங்கள் போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News