Shukra Peyarchi 2025: மீன ராசியில் சுக்கிர பகவான் பெயர்ச்சி ஆக இருப்பதால், அது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்ன தாக்கத்தை செலுத்தும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Shukra Peyarchi 2025, Astrological Predictions: வரும் ஜன. 28ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறது. சுக்கிரன் அடுத்த 123 நாள்களுக்கு அதாவது மே மாதம் 31ஆம் தேதி வரை சமீனத்தில் நீடிப்பார். சுக்கிர பகவான் கலை, காதல், ஈர்ப்பு போன்றவற்றை அளிக்கும். மீனத்தில் சுக்கிரன் பகவான் வருவதால் 12 ராசிக்காரர்களின் (12 Zodiac Signs) வாழ்க்கையில் பெரும் தாக்கம் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் கணிப்புகள் மற்றும் பொதுவான கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.
மேஷம் (Aries): சோம்பேறித்தனத்தை தவிர்த்து உடற்பயிற்சியில் கவனம் செத்த வேண்டும். குறிப்பாக, உடல் பருமனை குறைக்க உணவுப் பழக்கவழக்கத்தில் கூடுதல் சிரத்தை எடுக்கவும். வேலையிடத்தில் பெண்களுடன் சச்சரவுகளைத் தவிர்க்கவும். இந்த காலகட்டத்தில் மன அமைதி உடன் இருப்பீர்கள். மேலும் இது தனிப்பட்ட ரீதியிலான வளர்ச்சிக்கு நல்லது.
ரிஷபம் (Taurus): சுக்கிரன் பெயர்ச்சி ஆகும் இந்த காலகட்டத்தில் பணி சார்ந்து பல வெற்றிகளை குவிப்பீர்கள், இதனால் மகிழ்ச்சி உண்டாகும். கடின உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் வலுவாகும். தனிப்பட்ட வாழ்வும் சிறப்பாக இருக்கும்.
மிதுனம் (Gemini): உங்களுக்கு பண ஆதாயங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் குடும்பம் செழிப்பாக இருக்கும். நண்பர்கள், மனதிற்கு நெருக்கமானவர்களுடன் நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
கடகம் (Cancer): உணவுப் பழக்கவழக்கத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் அவர்கள் உடல்நலத்தில் கடுமையான பிரச்னைகள் வரலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம் (Leo): இந்த காலகட்டம் உங்களுக்கு மன நிறைவை அளிக்கும். திருப்தியை உண்டாக்கும். உங்கள் செயல்கள் அனைத்தும் பாராட்டப்படும். உங்களின் உடல்நலனும் சீராக இருக்கும். பணியிடத்தில் பல வெற்றிகளை குவிப்பீர்கள்.
கன்னி (Virgo): சுக்கிரன் பெயர்ச்சி ஆகும் இந்த காலகட்டத்தில் காதல் வாழ்க்கையை சிறப்பாக இருக்கும். திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமண வரன்கள் குவியும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். இந்த காலகட்டம் உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.
துலாம் (Libra): சுக்கிரன் பெயர்ச்சி ஆகும் இந்த காலகட்டத்தில் வீட்டிலும் பணியிடத்திலும் பெண்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு தலைக்கொடுக்க வேண்டாம். எப்போதும் போல் அனைத்திலும் பொறுமையாக இருங்கள்.
விருச்சிகம் (Scorpio): சுக்கிர பெயர்ச்சியால் உங்களின் நண்பர்கள் உங்களால் பலனடைவார்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பொருளாதாரம் வலுவாக இருக்கும். மேலும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். போட்டித் தேர்வுகளில் நல்ல ரிசல்ட் வரும்.
தனுசு (Sagattarius): புதிய வாகனங்களை நீங்கள் இந்த காலகட்டத்தில் வாங்கலாம். நண்பர்கள், குடும்பத்தினர், மனதிற்கு நெருக்கமானவர்களுடன் நேரத்தை செலவிடம் வாய்ப்பு உங்களுக்கு கிட்டும். பொருளாதாரம் பலமாகி, மன நிம்மதி அடைவீர்கள்.
மகரம் (Capricon): சுக்கிர பெயர்ச்சியால் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உங்கள் கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். தனிப்பட்ட ஆசைகள் நிறைவேறும்.
கும்பம் (Aquarius): சுக்கிர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை உயரும். பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். உங்கள் இனிமையான குரலுக்கு மதிப்பு கிடைக்கும்.
மீனம் (Pisces): சுக்கிர பெயர்ச்சியால் இந்த காலகட்டம் இவர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். மேலும் உங்கள் வசதிகள் அதிகரிக்கும் காலம் இது. உங்கள் புகழ் அதிகளவில் பரவும், அதுவும் குறிப்பாக பெண்கள் மத்தியில் அதிகரிக்கும்.