திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி இன்று ஒருநாள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த 11 நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணி அளவில் காலமானார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே தமிழக அரசு சார்பில், திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாளை அரசு விடுமுறை என்றும், அடுத்த 7 நாட்களுக்கு அதாவது ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு சார்பில், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி இன்று ஒருநாள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் எனவும், நாடு முழுவதும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவும் மத்திய அரசு உத்தரவு பிறபித்துள்ளது.