உதகை அருகே உள்ள தொட்டபெட்டா மலை சிகரம் நாளை முதல் மீண்டும் திறப்பு

Ooty: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை காண வந்த வண்ணம் உள்ளனர். 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 22, 2024, 05:36 PM IST
  • உதகமண்டலம் அருகே உள்ளது தொட்டபெட்டா மலை சிகரம்.
  • கடந்த ஏழு நாட்களாக "FAST TAG” சோதனைச்சாவடி அமைப்பதற்கான பணிகள் நடந்து வந்தன.
  • பணிகள் முடிவடைந்து இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
உதகை அருகே உள்ள தொட்டபெட்டா மலை சிகரம் நாளை முதல் மீண்டும் திறப்பு title=

 உதகமண்டலம் அருகே உள்ள தொட்டபெட்டா மலை சிகரம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றது. கடந்த ஏழு நாட்களாக "FAST TAG” சோதனைச்சாவடி அமைப்பதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் நாளை முதல் தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்லலாம் என வனத்துறை அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை காண வந்து செல்கின்றனர். குறிப்பாக இந்த ஆண்டு உதகையில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மட்டும் நடைபெற்றது. அதனை காண வருகை தரும் சுற்றுலா பயணிகள் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வந்தனர்.

இந்த நிலையில் தொட்டபெட்டா சந்திப்பில் செயல்பட்டு வரும் FAST TAG சோதனை சாவடியால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து அந்த FAST TAG சோதனை சாவடியை வேறு இடத்திற்கு மாற்றும் பணி கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. பணிகள் காரணமாக தொட்டபெட்டா மலைச்சிகரம் கடந்த ஏழு நாட்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 2வது நாளாக ஜாபர் சாதிக் சகோதரர் ஆஜர்.. அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

FAST TAG சோதனை சாவடி இடமாற்றம் பணிகள் ஏழு நாட்களாக நடைபெற்று வந்தாலும் கனமழை காரணமாக 50 சதவீதம் பணிகள் மட்டுமே செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தொட்டபெட்டா காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்குமாறு பல தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதால் நாளை முதல் தொட்டபெட்டா மீண்டும் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நாளைக்கு காலை முதல் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கிணத்தை காணோம்... வடிவேலு பாணியில் போஸ்டர் ஒட்டிய உத்திரமேரூர் கிராம மக்கள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News