டெல்லி நிதி ஆயோக் கூட்டம்: தமிழக முதல்வர் பங்கேற்பு!

பிரதமர் தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்துள்ளார்!  

Last Updated : Jun 17, 2018, 11:15 AM IST
டெல்லி நிதி ஆயோக் கூட்டம்: தமிழக முதல்வர் பங்கேற்பு! title=

மத்திய திட்டக் கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பை பிரதமர் மோடி ஏற்படுத்தினார். இந்த அமைப்பின் நான்காவது நிர்வாக கவுன்சில் கூட்டம் டெல்லி ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி தலைமையில் துவங்கியுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை கவர்னர்கள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்துள்ளார். இந்த  கூட்டத்தில், பங்கேற்ற தமிழக முதல்வர் பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்தற்கு பிரதமருக்கு நன்றி தெரிவிக்க திட்டமிட்டுள்ளார். மேலும், ஊட்டச்சத்து திட்டம், தடுப்பூசி, மருத்துவ வசதி திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. 

 

 

Trending News