அடுத்த தேர்தல்! ஜெயலலிதா பாணியில் பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு

Minister Sekar Babu | சட்டப்பேரவை தேர்தல் குறித்து எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு, ஜெயலலிதா பாணியில் அதிரடியாக பதில் அளித்தார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 16, 2025, 02:20 PM IST
  • சென்னையில் பொங்கல் விழா
  • அமைச்சர் சேகர் பாபு பங்கேற்பு
  • திமுகவுக்கு எதிரிகளே இல்லை என பேச்சு
அடுத்த தேர்தல்! ஜெயலலிதா பாணியில் பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு title=

Minister Sekar Babu | சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள சானிக்குளம் பகுதியில் 400 மங்கையர்கள் ஒன்றுகூடி தைத்திருநாள் மற்றும் சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார். உரி அடித்தும் சிலம்பம் சுற்றியும் அப்பகுதி மக்களுடன் சமத்துவ பொங்கலை கொண்டாடினார்... சிலம்பம் சுழற்றிய சிறுவர் சிறுமிகளுக்கு ரொக்கமாக பரிசுத்தொகையையும் வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது, காணும் பொங்கலில் உலகத்தை முழு சுதந்திரத்தோடு காணுகின்ற ஆட்சி அமைந்திருக்கிறது காணும் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் என்றார். ஐஐடி மாணவி பாலியல் குற்ற சம்பவம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், நடைபெறுகின்ற குற்றச்சம்பவங்களை தடுப்பது ஒரு புறம், நடந்து முடிந்த பிறகு அதன் மீது நடவடிக்கை எடுப்பது மறுபுறம். இந்த ஆட்சியில் இன்னார் இனியவர் என்று பாகுபாடு கிடையாது, தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்ற சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஐ.ஐ.டி சம்பவம் தொடர்பாக உரிய குற்றவாளி கைது செய்து கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்க காவல்துறையை முதலமைச்சர் முடக்கிவிட்டுள்ளார். குற்ற சம்பவம் நடந்தால் அதன் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கின்ற ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்றார்.

மேலும், ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பார்கள். அதுபோல 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு  வெற்றிக்கு உண்டான அறிகுறியாக வெற்றிக்குரிய  வெளிச்சமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இருக்கும். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் இதுவரை இல்லாத வாக்கு வித்தியாசத்தில்  ஈரோடு இடைத்தேர்தல் நாளை எதிர்கொள்வோம் என கூறினார். 

கூட்டணி மதிக்கின்ற ஒரு தலைவர்  என்றால் தமிழக முதல்வரை போல் கூட்டணி தலைவர்களை மதிப்பவர்களை எங்கும் காண முடியாது. கேட்கின்ற போதெல்லாம் கூட்டணி தலைவர்களுக்கு சட்ட பேரவையில்  வாய்ப்பை தருகிறார்கள் என்ற அமைச்சர் சேகர்பாபு, வேட்பாளரோடு சேர்ந்து கட்சியின் மூத்த நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் ஒன்றாக இணைந்து தான் இந்த வேட்பாளரை தேர்வு செய்து ஆதரித்திருக்கிறார்கள். கூட்டணி கட்சியை மதிக்கின்ற ஒரு தலைவர் நாட்டிலே உண்டு என்றால் அது தமிழ்நாடு முதலமைச்சர் தான். கூட்டணி கட்சியினர் குறைகளை சொன்னாலும் கூட அதனையும் நிவர்த்தி செய்து அதன் பிறகு அவர்களை அழைத்து குற்றத்தின் பின்னணி, குற்றத்தின் விளக்கத்தையும் விளக்கி, அசைக்க முடியாத இரு கரங்களாக கைகோர்த்துக்கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறது திமுக கூட்டணி என தெரிவித்தார்.

மேலும் படிக்க | பிரபல நடிகர் மர்ம மரணம்! ஹோட்டல் அறையில் கிடந்த பிணம்-நடந்தது என்ன?

மேலும் படிக்க | ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த 2 தமிழ் சினிமா பிரபலங்கள்! ஒருவர் நடிகர், இன்னொருவர் இயக்குநர்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News