கிராஜுவிட்டி விதிகள்... 5, 7, 10 ஆண்டுகள் சர்வீஸுக்கு கிடைக்கும் பணிக் கொடை எவ்வளவு?

Gratuity Rules: ஊழியர்களின் தொடர்ச்சியான சேவையை அங்கீரிக்கும் வகையிலும், அவர்களின் கடின உழைப்பு மற்றும் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையிலும் வழங்கப்படும் தொகையே கிராஜுவிட்டி அல்லது பணிக் கொடை ஆகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 15, 2025, 11:18 AM IST
  • பணிக்கொடையைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்
  • அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பருவகால நிறுவனங்களுக்கு, ஒரு பருவத்திற்கு ஏழு நாட்கள் ஊதியத்தில் கிராஜுவிட்டி கணக்கிடப்படுகிறது.
கிராஜுவிட்டி விதிகள்... 5, 7, 10 ஆண்டுகள் சர்வீஸுக்கு கிடைக்கும் பணிக் கொடை எவ்வளவு? title=

Gratuity Rules: ஊழியர்களின் தொடர்ச்சியான சேவையை அங்கீரிக்கும் வகையிலும், அவர்களின் கடின உழைப்பு மற்றும் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையிலும் வழங்கப்படும் தொகையே கிராஜுவிட்டி அல்லது பணிக் கொடை ஆகும். ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு (PF) இணையாக அரசாங்கம் நிர்ணயித்துள்ள ஒரு அங்கம் தான் கிராஜுவிட்டி.10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் தொழிலாளர்களை பணியமர்த்தும் கடைகள் அல்லது நிறுவனங்களுக்கு கிராஜுவிட்டி சட்டம் பொருந்தும். ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரிந்தால், அவர் பணிக்கொடையைப் பெற தகுதி அடைவதாக விதிகள் கூறுகின்றன.

நிறுவனங்கள் அல்லது முதலாளிகள், ஊழியரின் பூர்த்தி செய்யப்பட்ட ஒவ்வொரு  சேவை ஆண்டிற்கும் 15 நாட்கள் ஊதியம் என்ற அளவில் கிராஜுவிட்டி செலுத்துவதை இது கட்டாயமாக்குகிறது. அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பருவகால நிறுவனங்களுக்கு, ஒரு பருவத்திற்கு ஏழு நாட்கள் ஊதியத்தில் கிராஜுவிட்டி கணக்கிடப்படுகிறது. 

பணிக்கொடை விதிகள், அதை கணக்கிடும் முறை மற்றும் அது ஊழியர்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.

பணிக்கொடையைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்:

(கடைசி சம்பளம்) x (சேவை ஆண்டுகள்) x (15/26)

இறுதி சம்பளம்: இதில் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி (DA) மற்றும் கமிஷன் ஆகியவை அடங்கும்.

வேலை நாட்கள்: ஒரு மாதத்தில் 26 வேலை நாட்கள் கருதப்படுகின்றன.

15 நாள் சராசரி: 15 நாட்கள் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுகிறது.

எடுத்துக்காட்டு: பணிக்கொடைத் தொகையை நிர்ணயித்தல் (இறுதி சம்பளம் ரூ. 30,000 என்று வைத்துக் கொண்டால்)

5 வருட சேவையில்:

கடைசியாக பெற்ற சம்பளம்: ரூ. 30,000

கணக்கீடு: ரூ. 30,000 x 5 x (15/26)

மொத்த பணிக்கொடைத் தொகை: ரூ. 86,538.46

7 வருட சேவையில்:

கடைசி சம்பளம்: ரூ. 30,000

கணக்கீடு: ரூ. 30,000 x 7 x (15/26)

மொத்த பணிக்கொடைத் தொகை: ரூ. 1,21,153.84

10 வருட சேவையில்:

கடைசி சம்பளம்: ரூ. 30,000

கணக்கீடு: ரூ. 30,000 x 10 x (15/26)

மொத்த பணிக்கொடைத் தொகை: ரூ. 1,73,076.92

பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் வராத ஊழியர்களுக்கு, பயன்படுத்தப்படும் சூத்திரம்:

பணிக்கொடைத் தொகை = (15 x கடைசியாகப் பெற்ற சம்பளத் தொகை x சேவைக் காலம்) / 30

பணிக்கொடையின் நன்மைகள்:
எதிர்காலப் பாதுகாப்பு: பணியின் முடிவில் ஒரு பெரிய தொகையின் வடிவத்தில் நன்மை.

அரசாங்க விதிகளுக்கு இணங்குதல்: PF போலவே, பணிக்கொடையும் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகிறது.

வரிச் சலுகைகள்: பணிக்கொடையின் தொகை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | இனி ஊதியக்குழுவே கிடையாது, ஊதிய உயர்வுக்கு புதிய சூத்திரம்: அரசு ஊழியர்களுக்கு மாஸ் அறிவிப்பு

எந்த சூழ்நிலையில் விதிகள் மாறுகின்றன?

நிறுவனம் பணிக்கொடை செலுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்றால், விதிகள் மாறக்கூடும்.

கணக்கிடும் முறை: ஒவ்வொரு ஆண்டும் மாத சம்பளத்தில் பாதிக்கு சமமான தொகை வழங்கப்படுகிறது.

வேலை நாட்கள்: மாதம் 30 நாட்களாகக் கருதப்படுகிறது.

ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து பணியாற்றிய ஒவ்வொரு ஊழியரும் பணிக்கொடையின் பலனைப் பெறலாம். இந்த சலுகை சம்பளம் வாங்குபவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் சேவை ஆண்டுகள் மற்றும் கடைசி சம்பளத்தின் அடிப்படையில் பணிக்கொடையின் பலனை உறுதி செய்யுங்கள். இது உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் மட்டுமல்ல, உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எதிர்காலத்திற்கான நிதி பாதுகாப்பையும் வழங்குகிறது.

மேலும் படிக்க | PPF முதலீடு... ரூ.48,000 பென்ஷன் பெற உதவும் 15+5+5 ஃபார்முலா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News