உச்சக்கட்ட குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்... எப்போது அமலுக்கு வருகிறது 8வது ஊதியக்குழு?

8th Pay Commission: 8வது ஊதியக்குழு பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதனால், மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எவ்வளவு உயரும் என்ற முழு கணக்கீடுகளை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 16, 2025, 06:24 PM IST
  • 8வது ஊதியக்குழு அமல்படுத்துவதற்கு எவ்வித காலக்கெடுவும் இல்லை
  • 2026ஆம் ஆண்டில் 7வது ஊதியக்குழு அமலில் உள்ளது.
  • 8வது ஊதியக்குழுவால் அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்.
உச்சக்கட்ட குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்... எப்போது அமலுக்கு வருகிறது 8வது ஊதியக்குழு? title=

8th Pay Commission Latest News Updates: அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியக்காரர்களுக்கான ஓய்வூதியம் ஆகியவை ஊதியக் குழுக்களின் பரிந்துரைகளின் படியே வழங்கப்படும். தற்போது 7வது ஊதியக்குழு அமலில் உள்ளது. 7வது ஊதியக்குழு கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான 8வது ஊதியக்குழு பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இருப்பினும், 8வது ஊதியக்குழு உடனடியாக அமலுக்கு வராது, 7வது ஊதியக்குழு முடிவுக்கு வந்த பின்னரே 8வது ஊதியக்குழு உருவாகும். 2026ஆம் ஆண்டு வரை 7வது ஊதியக்குழு அமலில் இருக்கும். 2026ஆம் ஆண்டு புதிய ஊதியக்குழுவான 8வது ஊதியக்குழு உருவாகும். இதன்மூலம், மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் சார்ந்து மாற்றியமைக்கப்படும். இருப்பினும், 8வது ஊதியக்குழு அமல்படுத்துவதற்கு எவ்வித காலக்கெடுவும் இல்லை.

மத்திய அரசு ஊழியர்களின் வருமானம் அதிகரிக்கும்

மத்திய அரசு ஊழியர்களின் சங்கம் இதுகுறித்து அதிகம் அழுத்தம் கொடுத்திருந்த நிலையில், தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு புத்தாண்டில் இந்த நல்ல செய்தியை கொடுத்திருக்கிறது. 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால் அரசு ஊழியர்களின் மாத வருமானம் பெரும் வளர்ச்சி அடையும். 

மேலும் படிக்க | 8th Pay Commission Update... 8வது ஊதிய குழு அமைக்க அமைச்சரவை ஒப்புதல்...

8வது ஊதியக்குழுவை அமலுக்கு கொண்டுவர அடுத்த கட்ட நடவடிக்கையை மத்திய அரசு இனி எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 8வது ஊதியக்குழு மூலம் என்னென்ன பலன்கள் கிடைக்கும், என்னென்ன கிடைக்காது என இப்போதே தெரிவிக்க இயலாது. 8வது ஊதியக்குழுவின் கீழ் என்னென்ன பலன்கள் அமலுக்கு வரும் என்பதை அந்த ஊதியக்குழுவின் தலைவர்தான் முடிவு செய்வார்.

8ஆவது ஊதியக்குழு: எப்போது அமலுக்கு வரும்?

8வது ஊதியக்குழுவின் தலைவர் 2026ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்படுவார். 2026ஆம் ஆண்டில் தான் 8ஆவது ஊதியக்குழு அமலுக்கு வரும். இதனை தொடர்ந்து கண்காணிக்க ஒரு குழு உருவாக்கப்படும். அதற்கு பிறகு சம்பள உயர்வில் என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்படும் என்பது தெளிவாகும். இருந்தாலும் 7வது ஊதியக்குழுவுடன் ஒப்பிடும் போது 8வது ஊதியக்குழு மூலம் அரசு ஊழியர்களுக்கு மாத வருமானம் அதிகமாகும் என்பது மட்டும் உறுதியாகிறது. அதிலும் ஃபிட்மண்ட் ஃபேக்டர் 8வது ஊதியக்குழுவில் அதிமுக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு மாற்றத்தை மத்திய அரசு செய்து வருகிறது. 

8ஆவது ஊதியக்குழு: வருமானம் எவ்வளவு உயரும்?

8வது ஊதியக்குழு அமலுக்கு வரும்பட்சத்தில், ஃபிட்மண்ட் ஃபேக்டர் 3.68 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இதன்மூலம், மாதச் சம்பளத்திற்கு என்ன பார்முலா பயன்படுத்தினாலும், அரசு ஊழியர்களின் மாத வருமானம் 44.44% வரை உயரும். உதாரணத்திற்கு, மத்திய அரசு ஊழியர் ஒருவர் தற்போது ரூ. 40 ஆயிரம் வருமானம் பெறுகிறார் என்றால் 8வது ஊதியக்குழு அமலுக்கு வருவதன் மூலம் ரூ.1 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | EPFO 3.0 விதிகள்: 7 கோடி+ EPF உறுப்பினர்களுக்கு எந்த வகையில் பயனளிக்கும்... விரிவான தகவல் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News