2025 Tamil Movies, Netflix Release: 2025ஆம் ஆண்டில் நெட்பிளிக்ஸ் ஓடிடி மூலம் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்களின் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது.
இவை அனைத்தும் இதுவரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள படங்களின் விவரம் ஆகும். இதற்கு பிறகும் கூட நெட்பிளிக்ஸ் வேறு திரைப்படங்களை ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளது.
குட் பேட் அக்ளி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகும் இந்த படத்தில், அஜித் குமார் மற்றும் திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இத்திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இது நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறது.
விடாமுயற்சி: இதிலும் அஜித் குமார் மற்றும் திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் இத்திரைப்படம் மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் ரிலீஸ் ஆகலாம். இதுவும் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறது.
ரெட்ரோ: சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இத்திரைப்படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதை தொடர்ந்து நெட்பிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.
தக் லைஃப்: கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த திரைபடத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. திரையரங்கில் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது, அதை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
பைசன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்திலும் ரிலீஸ் ஆகிறது. இத்திரைப்படம் மார்ச்சில் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காந்தா: துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.
பெருசு: கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வைபவ், சுனில், நிஹாரிகா உள்ளிட்டோர் நடிக்கும் இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.
டிராகன்: பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் 'ஓ மை கடவுளே...' திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் பிப்ரவரியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெட்பிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. அதேபோல், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிக்கும் மற்றொரு பெயரிடப்படாத படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறது.