Sani Peyarchi 2025: சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சி ஆவதால், இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மொத்தமாக மாறப்போகிறது.
சனி பகவான் (Lord Saturn) ஒரு ராசியில் இருந்து மற்ற ராசிக்கு மாறுவதற்கு நீண்ட காலத்தை எடுத்துக்கொள்வார். முழுவதுமாக 12 ராசிகளையும் (Zodiac Signs) அவர் சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும்.
நீதிக்கான கடவுளாக சனி பகவான் (Lord Saturn) ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறார். அதுமட்டுமின்றி மற்ற கிரகங்களை விட சனி பகவான் தான் மிகவும் மெதுவாக நகருபவரும் ஆவார்.
அதாவது, சனி பகவான் (Shani) ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு அதிக காலத்தை எடுத்துக்கொள்வார்.
அந்த வகையில், சனி பகவான் வரும் மார்ச் 29ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி (Sani Peyarchi 2025) ஆகிறார். ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் மீன ராசிக்கு வருகை தருகிறார்.
சனி பகவான் மீன ராசிக்கு (Pisces) வருகை தருவது இந்த 3 ராசிக்காரர்களுக்கு சுபமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை, சனி பெயர்ச்சியால் முற்றிலுமாக மாறப்போகிறது. கடந்த 30 ஆண்டுகளில் நடக்காத நல்ல விஷயங்களை அனைத்தும் சனி பெயர்ச்சிக்கு பின் கைக்கூடும்.
ரிஷபம் (Taurus): சனி பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் வருமானம் அபரிமிதமாக அதிகரிக்கும். வேலையிடத்திலும், வியாபாரத்திலும் எதிர்பார்க்காத நன்மைகள் கைக்கூடி வரும். உங்களின் வேலை வாழ்க்கையில் திடீரென உச்சத்திற்கு செல்வீர்கள். வேலைத் தேடி வருபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். முதலீட்டில் இருந்து நல்ல வருமானம் வரும். மன நிம்மதி கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும்.
துலாம் (Libra): வேலையில் இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி பெரிய நன்மையை அளிக்கும். பணியில் நீங்கள் எதிர்பார்க்காத வகையில், பதவி உயர்வு கிடைக்கும். வீட்டில் செல்வம் பெருகும். இந்த காலகட்டத்தில் நல்ல செய்திகள் உங்களை தேடி வரும். செலவுகள் குறையும். இந்த நேரம் என்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமான நேரமாகும். நீண்ட காலத்தை கருத்தில் கொண்டு முதலீடு செய்பவர்களுக்கு நல்ல வருமானம் வரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
மகரம் (Capricon): சனி பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் திடீரென பண மழையில் நனைவார்கள். மேலும் நீண்ட நாள்களாக வராமல் இருந்த பணமும் உங்களை தேடி வந்து சேரும். வேலை மற்றும் வியாபாரம் சார்ந்து பல்வேறு வாய்ப்புகள் குவியும், லாபமும் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கு இது நல்ல வாய்ப்பாகும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சிகரமான காலகட்டமாகும். குடும்பத்தினர் உடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
பொறுப்பு துறப்பு: சனி பெயர்ச்சி குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் கணிப்புகள் மற்றும் பொதுவான கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.