மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வானாதி ராஜபுரம் கோசாலையில் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற மாடுகளுக்கு பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. உழவுக்கு உதவி செய்யும் உற்ற நண்பனாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப்பொங்கல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
மாட்டுப்பொங்கலை (Mattu Pongal) முன்னிட்டு, கால்நடைகள், தண்ணீரில் குளிப்பாட்டப்பட்டு, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, பொங்கலிட்டு, மாடுகளுக்கு பூஜை செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த வாணதிராஜபுரத்தில், கோசாலை (பசுக்கள் காப்பகம்) அமைந்துள்ளது.
ஆதரவற்று திரியும் மாடுகள், பால் அற்றுப்போய், அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் மாடுகள், முதுமையடைந்த மாடுகள் உள்ளிட்ட ஆதரவற்ற மாடுகள் இங்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.
இங்கு 1008 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு கோபூஜை விழா நடைபெற்றது. மாடுகளை குளிப்பாட்டி நெட்டிமாலைகள் அணிவிக்கப்பட்டு மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
கொரோனா (Coronavirus) கட்டுப்பாட்டு விதிமுறைகளால் குறைந்த அளவில் வந்திருந்த பொதுமக்கள் மாடுகளுக்கு பூஜைசெய்து , உணவு அளித்து வழிபாடு நடத்தினர்.
ALSO READ | பொறி பறக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு..! திமிரும் காளைகள்.. சீறும் காளையர்கள்
ALSO READ | மாட்டுப் பொங்கலை இப்படியும் கொண்டாடலாம்..! உகந்த நேரம் எது?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR