Actress Malavika Recent Photos : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் மாளவிகா. இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actress Malavika Recent Photos : 90கள் மற்றும் 2000 காலக்கட்டத்தில், தமிழ் இளைஞர்களை கவர்ந்த நடிகைகளுள் ஒருவராக இருந்தவர், மாளவிகா. இவர், மிகப்பிரபலமாக காரணமாக இருந்தது, “வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும்” பாடல். சில ஆண்டுகளுக்கு முன்பு, திரையுலகில் இருந்து விலகிய இவர், தற்போது குடும்பத்தினருடன் அடிக்கடி சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாளவிகா, ஹீரோயினாக மட்டுமன்றி ஒரு சில படங்களில் கேமியோ கதாப்பாத்திரங்களிலும், இன்னும் சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடும் கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
மாளவிகா அறிமுகமானது, 1999ல் வெளியான உன்னைத்தேடி படம் மூலமாகத்தான். இதற்கடுத்து கன்னடம், தெலுங்கு என பல படங்களில் தொடர்ந்து நடித்தார்.
1999ல் ஆரம்பித்து, 2009ஆம் ஆண்டு வரை வரிசையாக பல படங்களில் நடித்து வந்த இவர், அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
மாளவிகாவை பலரும் அடையாளம் கண்டுகொள்ள காரணமாக இருந்தது, “வாள மீனுக்கும் விளங்கு மீனுக்கும் கல்யாணம்” பாடல் மூலமாகத்தான்.
மாளவிகாவின் உண்மையான பெயர், ஸ்வேதா. இவர், திரையுலகிற்காக தனது பெயரை மாளவிகா என மாற்றிக்கொண்டார்.
மாளவிகாவிற்கு தற்போது 45 வயதாகிறது. இவருக்கு 8 வயதில் ஒரு மகனும் இருக்கிறான். தனது குடும்பத்தினருடன் அடிக்கடி பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார், மாளவிகா.
45 வயதிலும், மாளவிகா க்ளாமராக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.