விஜய் ஹசாரே டிராபியில் அதிக ரன்கள் எடுக்க வீரர்களின் பட்டியல்.
விஜய் ஹசாரே டிராபி தொடர் கடைசி கட்டத்தை எட்டி இன்று(ஜன.18) அத்தொடரின் இறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இறுதி போட்டியில் விதர்பா அணியும் கர்நாடகா அணியும் மோதி வருகின்றன. இந்நிலையில், இத்தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர்களின் பட்டியலை இங்கு தொகுத்துள்ளோம்.
விதர்பா அணிக்காக விளையாடும் கருண் நாயர் விஜய் ஹசாரே டிராபி 2024/25 தொடரில் 752 ரன்கள் விளாசி அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
விஜய் ஹசாரே டிராபி 2024/25 தொடரில் கர்நாடகா அணிக்காக விளையாடும் மயங்க் அகர்வால் 619 ரன்கள் அடித்துள்ளார்.
23 வயதாகும் சித்தேஷ் அசோக் வீர் விஜய் ஹசாரே டிராபியில் 2024/25 மகராஷ்டிரா அணிக்காக விளையாடினார். அவர் 520 ரன்களை அடித்துள்ளார்.
பஞ்சாப் அணிக்காக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் 498 ரன்களை அடித்து 4வது இடத்தில் உள்ளார்.
நட்சத்திர பேட்டரான அபிசேக் சர்மா பஞ்சாப் அணிக்காக விளையாடிய நிலையில், அவர் 467 ரன்கள் அடித்துள்ளார்.
அங்கித் குமார் விஜய் ஹசாரே டிராபியில் 2024/25 ஹரியானா அணிக்காக விளையாடினார். இவரும் 467 ரன்கள் அடித்துள்ளார்.
ஆயுஷ் மத்ரே மும்பை அணிக்காக விளையாடினார். அவர் 458 ரன்கள் அடித்துள்ளார்.
18 வயதே ஆன கார்திக் சர்மா ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். விக்கெட் கீப்பரான இவர் 445 ரன்கள் எடுத்துள்ளார்.