Lok Sabha Elections 2024 BJP Phase 2 Candidates List : பாஜக கட்சி 2ஆம் கட்ட தேர்தல் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், நடிகை ராதிகா (Raadhika Sarathkumar) விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
பாஜக 2ஆம் கட்ட தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்:
1.புதுச்சேரி-ஏ.நமசிவாயம்
2.திருவள்ளூர்-வி.பாலகணபதி
3.வட சென்னை-பால் கனகராஜ்
4.திருவண்ணாமலை-அஸ்வத்தாமன்
5.நாமக்கல்-ராமலிங்கம்
6.திருப்பூர்-ஏ.பி.முருகானந்தம்
7.பொள்ளாச்சி-வசந்தராஜன்
8.கரூர்-வி.வி.செந்தில்நாதன்
9.சிதம்பரம்-பி.கார்தியாயினி
10.நாகப்பட்டினம்-எஸ்.ஜி.எம்.ரமேஷ்
11.தஞ்சாவூர்-எம்.முருகானந்தம்
12.சிவகங்கை-தேவநாதன் யாதவ்
13.மதுரை-ராம ஸ்ரீநிவாசன்
14.விருதுநகர்-ராதிகா சரத்குமார்
15.தென்காசி-ஜான் பாண்டியன்
மக்களவை தேர்தல் 2024:
மக்களவை தேர்தல் 2024 தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் அறிக்கைகள், வேட்பாளர்கள் பட்டியல்கள் ஆகியவற்றை வெளியிட்டு வருகின்றன. திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருந்த நிலையில், பாஜக கட்சியும் நேற்று முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்திருக்கிறது.
மேலும் படிக்க | அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்! மகளிர் உரிமைத்தொகை உயர்வு..வேறு என்ன?
நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாஜக கட்சியுடன் ஆன கூட்டணியை சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதையடுத்து, சமத்துவ மக்கள் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகையும் சரத்குமாரின் மனைவியுமான ராதிகாவிற்கு, வரும் மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இவரது பெயர், பாஜக கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலிலேயே இடம் பிடிக்கும் என்று மக்களால் எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல்:
1.தென் சென்னை-டாக்டர் தமிழிசை சௌதரராஜன்
2.மத்திய சென்னை-வினோத் பி.செல்வம்
3.வேலூர்-ஏ.சி.சண்முகம் (புதிய நீதி கட்சி - தாமரை சின்னம்)
4.கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன்
5.நீலகிரி (தனி) - எல். முருகன்
6.கோயம்புத்தூர் - அண்ணாமலை
மேலும் படிக்க | கோவையில் அண்ணாமலை... தென் சென்னையில் தமிழிசை - பாஜக வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ