8th Pay Commission Latest News: எட்டாவது ஊதிய குழுவால் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
8th Pay Commission Approved By Modi Cabinet: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 8வது சம்பளக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சூப்பரான ஒரு குட் நியூஸ் அறிவிப்பை தந்துள்ளது. அதாவது நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்த 8வது ஊதியக்குழுவுக்கு மத்திய அமைச்சரே ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
8வது ஊதிய குழுவை கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது எனக் கூறப்பட்ட நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்தும் 8வது ஊதிய குழுவை அமைக்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 8வது சம்பளக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் 8வது ஊதிய குழு ஆணையத்தின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களுடனும் ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
7வது ஊதியக் குழுவை மாற்றி 8வது ஊதிய குழு அமல் செய்தால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 லிருந்து ரூ.51,480 ஆக அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதாவது ஃபிட்மென்ட் காரணி 2.86 ஆக மாற்றப்படும்போது இது சாத்தியமாகும்.
மேலும் 8வது ஊதிய குழு மூலம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள். ஏனென்றால் ஓய்வூதியமும் 186% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது ரூ.9,000 ஆக இருக்கக்கூடிய ஓய்வூதியம் ரூ.25,740 அதிகரிக்கப்படலாம்.
பொதுவாக, மத்திய அரசு ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு புதிய ஊதியக் குழுவை அமைக்கிறது. அதன் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் மற்றும் அகவிலைப்படி (DA) திருத்தப்பட்டு, அதற்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படும்.
எட்டாவது ஊதிய குழு அமைக்கப்பட்டால் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
பிப்ரவரி 2014 இல் உருவாக்கப்பட்ட 7வது ஊதியக் குழுவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது ஜனவரி 1, 2016 முதல் அமலுக்கு வந்தது.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வு ஊதியம் திருத்தியமைக்க 8வது சம்பளக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை இன்று (2025 ஜனவரி 16, வியாழக்கிழமை) ஒப்புதல் அளித்திருப்பதால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன் வாங்கும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.