சென்னை வேளச்சேரி அருகே அமெரிக்க தூதரகத்தின் மேற்பார்வையில் இண்டர்நேஷனல் பள்ளி ஒன்று விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "சென்னை வேளச்சேரி அருகே அமெரிக்க தூதரகத்தின் மேற்பார்வையில் இண்டர்நேஷனல் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளி அமைந்திருக்கும் இடம் தமிழக அரசுக்கு சொந்தமான இடமாக இருக்கும் நிலையில் இன்றைய நிலவரப்படி 12 ஏக்கர் அளவிருக்கும் அந்த இடம் 800 கோடி ரூபாய் மதிப்புடையது என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த இடத்திற்கு ஒரு இலட்ச ரூபாய் மட்டுமே மாத வாடகையாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தமிழக மக்களை சுரண்டும் முயற்சி.
மேலும் படிக்க - PM Kisan: 19வது தவணை யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது? செக் செய்வது எப்படி?
தமிழகத்தின் மற்ற தனியார் பள்ளிகள் அவர்கள் சொந்த இடத்தில் பள்ளிகள் அமைத்திருக்கும் போதும் தமிழக அரசு விதித்திருக்கும் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறார்கள். ஆனால் இந்த அமெரிக்கன் பள்ளியில் கட்டணம் தொடங்கி RTE வரை அரசு விதிகள் பின்பற்றப்படுவதில்லை. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இந்த பள்ளி இருப்பதால் RTI மூலமாக உண்மைகள் அறிய முடிவதும் இல்லை என புகார்கள் எழுந்துள்ளன" என்று கூறியுள்ளார்.
வசீகரன் குற்றசாட்டு
அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே இது தொடர்பான புகார்கள் எழுப்பப்படுவதாகக் குறிப்பிட்ட வசீகரன், அதிமுக திமுக என இரு அரசுகளும் இந்தப் பள்ளி குறித்த புகார்களில் கவனம் செலுத்தவில்லை எனக் கூறியிருக்கிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில் திரு .PTR அவர்களின் குழந்தைகள் இந்தப் பள்ளியில் படித்த போது அதிக கட்டண வசூல் பற்றி அவரே குற்றம் சாட்டியதாகவும், ஆனால் தற்போது திமுகவும் மௌனமாக இருப்பதாகவும் வசீகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சாமானிய மக்களுக்கோ அரசுக்கோ பயன் தராமல் அரசு இடத்தில் இந்தப் பள்ளி செயல்பட வேண்டிய கட்டாயம் என்ன? மத்திய அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா? போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வரை சந்திக்க இருப்பதாகவும் உரிய பதில் கிடைக்கும் வரை தொடர் முயற்சிகளும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் வசீகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க - தமிழ்நாடு விவசாயிகளுக்கு குட் நியூஸ் -பயிர் காப்பீடு அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ