யார் இந்த அமீர் அல் தானி? தங்க அரண்மனை, 500 கார்கள்.. அவரின் சொத்து மதிப்பு தெரியுமா?

India Qatar Relations: கத்தார் நாட்டின் தலைவர் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tamim bin Hamad Al Thani Net Worth: இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மற்றும் நட்புறவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் பிரதமர் மோடி மற்றும் கத்தார் தலைவர் அமீர் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரைப்பற்றி பார்ப்போம்.

1 /12

யார் இந்த கத்தார் அமீர் அல் தானி? அவரின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு? அவரிடம் இருக்கும் கார்கள் எத்தனை? எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்துள்ளார்? அவரின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.

2 /12

கத்தாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அவரது இரண்டு நாள் இந்தியப் பயணம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் அல்-தானி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

3 /12

டெல்லி விமான நிலையத்தில் அவரை வரவேற்க பிரதமர் மோடி நெறிமுறைகளை மீறிச் சென்றதாக கூறப்படுகிறது. அல்-தானி உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றின் தலைவர். அவருடைய செல்வத்தின் அளவைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியிடம் ரூ.3000 கோடி மதிப்புள்ள ஒரு படகு, 100 அறைகள் கொண்ட தங்க அரண்மனை மற்றும் 500 கார்களுக்கான பார்க்கிங் என மகத்தான செல்வத்திற்கு சொந்தக்காரர்.

4 /12

பிரதமர் மோடி ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை வரவேற்ற விதம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் முக்கியமானவை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அவர் இந்தியாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உட்பட முக்கியத் தலைவர்களை சந்தித்து பேசினார்.

5 /12

கடைசியாக அவர் 2015 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா வந்தார். அதன் பிறகு, தற்போது அவர் இரண்டாவது முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்தப் பயணத்தில் வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த ஒப்பந்தம் ஆகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மையமாகக் கொண்டு, வெளியுறவு அமைச்சகம், அவர்களின் உறவு "நட்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை" ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்று கூறியுள்ளது.

6 /12

ஷேக் தமீம் 1980 இல் பிறந்தார் மற்றும் லண்டனில் உள்ள ஹாரோ பள்ளி மற்றும் ராயல் மிலிட்டரி அகாடமி சாண்ட்ஹர்ஸ்டில் படித்தார். அவரது தந்தை ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல் தானி அரியணையைத் துறந்த பிறகு, 2013 இல் அவர் கத்தாரின் தலைவரானார்.

7 /12

கத்தார் நாட்டின் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளம் மிகுந்த நாடாக இருப்பதால், கத்தாரின் அமீர் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றின் தலைவராக உள்ளார். ஊடக அறிக்கைகளின்படி, ஷேக் தமீமின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் ரூ.20,000 கோடி ($2.4 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

8 /12

அவரது அரச குடும்பமான அல்-தானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.27 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஷேக் தமீம் தனது ஆடம்பரம் மற்றும் வாழ்க்கை முறைக்கு மிகவும் பிரபலமானவர். அவர் பல ஆடம்பர சொத்துக்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களின் உரிமையாளர்.

9 /12

அவர் தோஹா ராயல் அரண்மனையையும் ஓமானில் ஒரு பெரிய எஸ்டேட்டையும் வைத்திருக்கிறார். இது தவிர, சுமார் 3,300 கோடி ரூபாய் மதிப்புள்ள 'கட்டாரா' என்ற சொகுசு படகும் உள்ளது. புகாட்டி, ஃபெராரி மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற அரிய மற்றும் விலையுயர்ந்த கார்களின் மிகப்பெரிய சேகரிப்பை அவர் வைத்திருக்கிறார்.

10 /12

ஷேக் தமீம் அரசியல் மற்றும் வணிகத்தில் மட்டும் ஈடுபடவில்லை, விளையாட்டு உலகிலும் ஒரு பெரிய ஆளுமையாக உள்ளார். அவர் 2004 ஆம் ஆண்டு கத்தார் விளையாட்டு முதலீடுகளை (QSI) நிறுவினார். 2011 ஆம் ஆண்டில், QSI பிரான்சின் பிரபல கால்பந்து கிளப்பான பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனை (PSG) வாங்கியது. 2023 ஆம் ஆண்டில் QSI போர்ச்சுகலின் எஸ்சி பிராகா கிளப்பில் 21.7% பங்குகளை வாங்கியது.

11 /12

ஷேக் தமீமும் அவரது குடும்பத்தினரும் தோஹாவின் அற்புதமான அரச அரண்மனையில் வசிக்கின்றனர். இந்த அரண்மனை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இங்கு 15 அரண்மனைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்துவதற்கான வாகன நிறுத்துமிட வசதிகள் உள்ளன. 2019 ஆம் ஆண்டு அவர் ஓமானில் ஒரு அரச அரண்மனையைக் கட்டினார். இது தோஹாவின் அரச அரண்மனையைப் போலவே தோற்றமளிக்கிறது.

12 /12

ஷேக் தமீமின் இந்தப் பயணம் இந்தியாவிற்கும் கத்தாருக்கும் இடையிலான வர்த்தக மற்றும் மூலோபாய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா கத்தாரில் இருந்து அதிக அளவு எல்என்ஜியை இறக்குமதி செய்கிறது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி மற்றும் முதலீடு தொடர்பான பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. இந்தப் பயணம் இந்தியா-கத்தார் உறவுகளுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கும் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும்.