சென்னை: தமிழகத்தின் (TamilNadu) செங்கல்பட்டில் (Chengalpattu) சனிக்கிழமை நிலத் தகராறு தொடர்பாக (Property issue) ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக திமுக எம்.எல்.ஏ (DMK MLA) ஒருவர் கைது செய்யப்பட்டார். இதில், அந்த வழியாகச் சென்ற ஒருவர் லேசான காயங்களுக்கு ஆளானார். அவர் இதயவர்மன் (Idhayavarman) மீது புகார் அளித்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். மற்றொரு கும்பல் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்போரூர் எம்.எல்.ஏ மற்றும் அவரது குழுவினர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் உரிமம் பெறாத பிஸ்தால் மற்றும் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீசார் அவரைச் சந்திக்கச் சென்றபோது எம்.எல்.ஏ சனிக்கிழமை தப்பி ஓடியதாக அவர்கள் தெரிவித்தனர்
ALSO READ: தமிழகத்தில் ‘போலியாக’ SBI வங்கி கிளையை நடத்தி வந்த மோசடி கும்பல் கைது....!!
"அவர்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளனர். ஆனால், சம்பவம் நடந்த சமயத்தில் இந்த ஆயுதங்கள் உரிமம் பெறாத நிலையில் இருந்தன. எம்.எல்.ஏ.வாக இருப்பதால், நாங்கள் அவர் இரவு உணவை முடிக்கும் வரை காத்திருந்தோம். ஆனால் அவர் சுவர் ஏறி தப்பி ஓடிவிட்டார்" என்று வழக்கை விசாரித்த ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.
மோதலின் போது துப்பக்கியால் இரண்டு முறை சுடப்பட்டது. இதில் ஒருவரது காரின் போனெட் தாக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். இந்த நேரத்தில்தான், தனது இருசக்கர வாகனத்தில் அந்த வழியாகச் சென்ற சீனிவாசன் என்பவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டி எம்.எல்.ஏ.வை தனது புகாரில் அவர் பெயரிட்டுள்ளார்.
குமார் என்பவருக்குச் சொந்தமான தனியார் நிலத்தை,அவரது அனுமதி இல்லாமல் எம்.எல்.ஏ தோண்டியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து நிலப்பிரச்சனை வன்முறையாக மாறியது என்று போலீசார் கூறுகின்றனர். குமார் போலீஸ் புகார் அளித்த பின்னர் சனிக்கிழமை காலை போலீசார் இரு தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கியிருந்தாலும், போலீசார் அந்த இடத்தை அடைவதற்கு முன்பே அரை மணி நேரத்திற்குள் மோதல்கள் நடந்தன.
குமார் தலைமையிலான மற்ற குழுவில் சுமார் 70 பேர் கத்திகள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைக் கொண்டிருந்தனர் என்று போலீசார் கூறுகின்றனர்.
எம்.எல்.ஏ.வின் தந்தை மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், நேரில் பார்த்த எந்த சாட்சியும் இந்த கூற்றை உறுதிப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
எம்.எல்.ஏ.வின் குழு,குமாரின் கும்பல் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டுகிறது.
அரசியல்வாதி தனது 15 ஏக்கர் விளைநிலங்களை ஹௌசிங்க் பிளாட்டுகளாக மாற்ற முடிவு செய்ததிலிருந்து அண்டை நிலங்களின் உரிமையாளர்கள் மற்றும் கிராமவாசிகள் பெரும்பாலும் அதற்கு ஆதரவாக இல்லை என்று போலீசார் கூறுகின்றனர். அங்கு ஒரு கோயில் நிலம் பயன்படுத்தப்படுவதைக் குறித்து ஒரு ஆர்.டி.ஓ விசாரணையும் கடந்த மூன்று மாதங்களாக நிலுவையில் உள்ளது.
திமுக எம்.எல்.ஏவின் சகோதரர் உட்பட உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனிவாசன், லட்சுமிபதி, எம்.எல்.ஏ.வின் தந்தை மற்றும் குமார் தரப்பினர் அளித்த புகார்களை பதிவு செய்துள்ளதாக செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் கூறினார்.
ALSO READ:தபால்காரரே தலை வணங்குகிறோம்!! மாபெரும் மனிதர்கள்!!