‘உடல் பருமனுக்கு இதுதான் காரணம், கம்மி பண்ணுங்க....’ பிரதமர் மோடி அளித்த வெயிட் லாஸ் டிப்ஸ்

Weight Loss Tips: 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சமையல் எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்துவது உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணியாகும் என்று கூறினார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 31, 2025, 12:32 PM IST
  • இளைஞர்களிடையே காணப்படும் உடல் பருமன் கவலைக்குரியது.
  • அதை சரி செய்ய உடனடியக நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம்.
  • சமையல் எண்ணெயில் கவனம் செலுத்துவது அவசியம்.
‘உடல் பருமனுக்கு இதுதான் காரணம், கம்மி பண்ணுங்க....’ பிரதமர் மோடி அளித்த வெயிட் லாஸ் டிப்ஸ் title=

Weight Loss Tips: இந்தியா உட்பட உலகம் முழுவதும் உடல் எடை அதிகரிப்பு ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. முன்னர் ஒரு சிலருக்கே பிரச்சனையாக இருந்த இந்த நிலை, தற்போது பெரும்பாலானோரை பாடாய் படுத்துகிறது. உடல் பருமன் ஏற்பட்டால் அதை சரி செய்ய உடனடியக நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம். இது குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

PM Modi on Weight Loss

இப்போது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியும் இதைப் பற்றிப் பேசியுள்ளார். 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், சமையல் எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்துவது உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணியாகும் என்று கூறினார். சமையல் எண்ணெயை அதிகமாக உட்கொள்வது அனைத்து வயதினரையும் பாதிக்கிறது, நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க, வீடுகளில் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Cooking Oil: சமையல் எண்ணெயில் கவனம் செலுத்துவது அவசியம்

உடல் செயல்பாடு இல்லாமை, துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பிற காரணிகள் வாழ்க்கை முறை கோளாறுகளுக்குக் காரணமாகக் கருதப்படுகின்றன, ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சமையல் எண்ணெய் பற்றி நாம் அவ்வளவு யோசிப்பதில்லை. பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் இந்த விஷயத்தை முக்கியமாக கூறி,  அதிகப்படியான சமையல் எண்ணெயைப் பயன்படுத்துவது உடல் பருமனை அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளதை சுட்டிக்காட்டினார்.

இளைஞர்களிடையே காணப்படும் உடல் பருமன் கவலைக்குரியது

சமையல் எண்ணெயை அதிகமாக பயன்படுத்துவது உடல் பருமன் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்று பிரதமர் கூறினார். "நாட்டின் அனைத்து வயதினரும், இளைஞர்களும் கூட இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கவலைக்குரிய விஷயமாகும். ஏனெனில் உடல் பருமன் நீரிழிவு, இதய நோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது," என்று பிரதமர் தெரிவித்தார்.

Execrcise: உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்த பரிந்துரை

பிரதமர் நரேந்திர மோடி மக்கள் எண்ணெய் உட்கொள்ளலைக் குறைக்கவும், தினமும் உடற்பயிற்சி செய்யவும், சமச்சீரான மற்றும் சத்தான உணவை உட்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். அவர் கூறியுள்ள எடை இழப்பு டிப்சில் வழக்கமான வழிகளுடம் சமையல் எண்ணெயை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க அவர் கூறியது பலரது கவனத்தை கவர்ந்துள்ளது.

வழக்கத்தை விட 10% குறைவான எண்ணெய் பயன்பாடு

"மாதத் தொடக்கத்தில் நமது வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வந்து சேரும். இதுவரை, நீங்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு லிட்டர் சமையல் எண்ணெயை பயன்படுத்துகிறோர்களோ, அதில் இனி 10% குறைத்து பயன்படுத்தத் தொடங்குங்கள். எளிதாக செய்ய வேண்டுமானால், தினசரி எண்ணெய் உபயோகத்தில் 10 சதவிகிதம் குறைவாபாக பயன்படுத்துங்கள்” என்று பிரதமர் மோடி யோசனை கூறியுள்ளார்.

மேலும் படிக்க | நீரிழிவு, பிபி, இதய நோய்க்கு அடிப்படையே இந்த பிரச்சனை தான் - சரிசெய்ய சிம்பிள் டிப்ஸ்

மேலும் படிக்க | சிறுநீரில் ரத்தம் வந்தால் அலட்சியப்படுத்தாதீர்கள்... மிகப்பெரிய ஆபத்து..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News