Alia Bhatt Diet For Weight Loss : நடிகைகளை பொருத்தவரை அவர்கள் தங்களின் வேலைக்காக உடல் எடையை பராமரித்துக் கொள்வது என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் உடல் பருமனுடன் இருப்பவர்களும் உடல் எடையை குறைத்த பின்னரே திரையுலத்திற்குள் வருகின்றனர். அப்படி எடை குறைந்த நடிகைகளில் ஒருவர், ஆலியா பட்.
எடை குறைந்த ஆலியா பட்:
ஆலியா, ஸ்டுடென்ட் ஆப் தி இயர் என்ற படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். இதில் நடிப்பதற்கு முன்னர், அவர் எடை கூடியிருந்தார். ஆனால் ஹீரோயினாக வேண்டும் என்பதற்காக 3-4 மாதங்களில் 16 கிலோ வரை எடை குறைந்தார். இதற்கு அவர் இருந்த டயட்டும் செய்த உடற்பயிற்சிகளும் தான் காரணம் என கூறப்படுகிறது. இவர் இதை செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
முக்கியமான விஷயங்கள்:
அலியா பட் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருந்தபோது அவர் தீவிரமாக கடைபிடித்த சில முக்கியமான விஷயங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
பிரித்து சாப்பிடுதல்:
அலியா பட், மூன்று வேளை உணவிற்கு பதிலாக 6-8 வேலை சின்ன சின்ன உணவுகளாக எடுத்துக் கொண்டார். இது அவருக்கு அதீத பசி எடுப்பதை குறைத்ததோடு, உடலின் மெட்டபாலிஸ்தையும் ஆக்டிவாக வைத்துக் கொண்டது.
வீட்டு உணவுகள்:
என்ன ஆனாலும் ஆலியா பட் வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் சாப்பிட்டாராம். அது எவ்வளவு எளிமையான உணவாக இருந்தாலும் அதை மட்டுமே உட்கொண்டாராம்.
நீர் சத்து:
உடல் எடையை குறைக்க உடலில் நீர் சத்து இருக்க வேண்டியதும் அவசியம். இதைப் பின்பற்றிய ஆளியா, தினமும் நிறைய தண்ணீர் குடிப்பாராம். அப்படி இல்லை என்றால் இளநீர் அல்லது பிற பழச்சாறுகளையும் குடிப்பாராம். இது அவரது உடலை நீர் சத்துடன் வைத்துக் கொண்டதுடன் செரிமானத்தையும் சீராக்கியது.
டயட்:
ஆலியா காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் எலுமிச்சை கலந்து தண்ணீர் குடிப்பாராம். அப்படி இல்லை என்றால் உடலை டிடாக்ஸ் செய்யும் பானம் எதையாவது குடிப்பாராம்.
காலை உணவு:
ஆலியா காலை உணவாக எடுத்துக் கொண்டது, உப்புமா, போஹா அல்லது முட்டையின் வெள்ளைக்கரு. ஒரு சில நாட்களில் ஒரு கிண்ணம் நிறைய பழங்கள் மற்றும் நட்ஸ்களை உட்கொள்வார்.
காலை ஸ்நாக்ஸ்:
கை நிறைய வால்நட்ஸ் அல்லது பாதாம் ஆகியவற்றை காலை ஸ்னாக்ஸ் ஆக எடுத்துக் கொள்வார். அப்படி இல்லை என்றால் ஒரு வாழைப்பழம் அல்லது பப்பாளி பழம் ஆகியவற்றை எடுத்துக் கொள்வார்.
மதிய உணவு:
ஒரு கிண்ணம் பருப்புடன் தயிர் அல்லது ஊற வைத்த பயிர் போட்ட தால், அல்லது காய்கரியுடன் ராகி, கிரில் சிக்கன் உள்ளிட்டவற்றை மதிய உணவாக எடுத்துக் கொள்வாராம். பல சமயங்களில் புரதத்திற்காக மீனையும் எடுத்துக் கொள்வார் என கூறப்படுகிறது.
மாலை ஸ்னாக்ஸ்:
மாலையில் ஹெர்பல் டீயுடன் மக்கா நாவை வறுத்து சாப்பிடுவாராம். அப்படி இல்லை என்றால் எதேனும் ஒரு பழத்தை சாப்பிடுவார்.
இரவு உணவு:
இரவு உணவை மிக சீக்கிரமாக சாப்பிட்டு விடுவாராம் ஆலியா. குயினாவோ சாலட், புரதச்சத்து நிறைந்த பனீர் அல்லது மீன் ஆகியவற்றை எடுத்துக் கொள்வார்.
உறங்க செல்வதற்கு முன்…
ஆலியா உறங்க செல்வதற்கு முன்னர் ஹெர்பல் டீ அல்லது மஞ்சள் கலந்த பால் ஆகியவற்றை குடிப்பாராம்.
சாப்பிட தவிர்த்த உணவுகள்:
ஆதியா துரித உணவுகளை, பொறித்த உணவுகளை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்.
சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்வதில்லை.
கார்ப்ஸ் நிறைய இருக்கும் பாஸ்தா, பிரட் உள்ளிட்ட உணவுகளையும் அவர் எடுத்துக் கொள்வதை தவிர்த்து விட்டார்.
மேலும் படிக்க | 4 மாதங்களில் வெயிட் லாஸ் செய்ய வரலட்சுமி செய்த 4 விஷயங்கள்! ரொம்ப சிம்பிள்..
மேலும் படிக்க | சீக்கிரமா வெயிட் லாஸ் செய்ய ஹன்சிகா குடித்த காலை பானம்! நீங்களும் குடிக்கலாம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ