Naman Awards 2025: எந்தெந்த வீரர்களுக்கு என்னென்ன விருதுகள்...? முழு லிஸ்ட்

Naman Awards 2025: பிசிசிஐயின் விருது வழங்கும் 'நமன் விருதுகள்' நிகழ்வில், எந்தெந்த வீரர், வீராங்கனைக்களுக்கு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டன என்பதை இங்கு முழுமையாக காணலாம்.

பிசிசிஐ (BCCI) ஆண்டுதோறும் சிறந்த இந்திய கிரிக்கெட்டின் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த விருது நிகழ்ச்சி நமன் விருதுகள் என்றழைக்கப்படுகிறது. அந்த வகையில், நமன் விருதுகள் 2025 நிகழ்வில் யார் யாருக்கு என்னென்ன விருதுகள் கிடைத்துள்ளன என்பதை இங்கு விரிவாக காணலாம்.

1 /8

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2025ஆம் ஆண்டுக்கான நமன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மும்பையில் நடைபெற்றது. மொத்தம் 27 விருதுகள் அறிவிக்கப்பட்டன.

2 /8

அந்த வகையில், 2025ஆம் ஆண்டின் முக்கிய விருதுகளை வென்ற வீரர், வீராங்கனைகள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.

3 /8

சர்வேதச ஒருநாள் போட்டிகளில் மகளிர் பிரிவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதற்கான விருது - தீப்தி சர்மா, சர்வதேச அரங்கில் மகளிர் பிரிவில் சிறந்த அறிமுக வீராங்கனை விருது - ஆஷா சோப்னா.  

4 /8

சர்வேதச ஒருநாள் போட்டிகளில் மகளிர் பிரிவில் அதிக ரன்கள் அடித்ததற்கான விருது - ஸ்மிருதி மந்தனா, சர்வதேச அளவில் கிரிக்கெட் வீராங்கனை - ஸ்மிருதி மந்தனா.  

5 /8

ஆடவர் பிரிவில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது - ஜஸ்பிரித் பும்ரா, சர்வதேச அரங்கில் ஆடவர் பிரிவில் சிறந்த அறிமுக வீரர் விருது - சர்பராஸ் கான், பிசிசிஐ சிறப்பு விருது - ரவிச்சந்திரன் அஸ்வின்.  

6 /8

கர்னல் சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது - சச்சின் டெண்டுல்கர். இந்த விருதை ஐசிசி தலைவர் ஜெய் ஷா அவருக்கு வழங்கினார்.   

7 /8

உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய உள்ளூர் அணிக்கு வழங்கப்படும் பிசிசிஐ விருது மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.   

8 /8

16 வயதுக்குட்பட்டோருக்கான விஜய் மெர்ச்சன்ட் டிராபியில் அதிக விக்கெட் எடுத்தவர்களுக்கான ஜக்மோகன் டால்மியா கோப்பை ஹேம்சுதேஷன் ஜெகநாதன் பெற்றுள்ளார். மேலும், 23 வயதுக்குட்பட்டோருக்கான CK நாயுடு கோப்பையில் (எலைட் பிரிவு) அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான எம்.ஏ. சிதம்பரம் கோப்பை பி. வித்யுத் பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.