disproportionate assets case: தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன் உத்தரவிட்டுள்ளார். தற்போது, கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் தனக்கு சொந்தமானது என்று மறைந்த முதல்வரின் உறவினர் ஜெ.தீபா நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கில் நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன் அளித்த தீர்ப்பில், நகைகளை ஏலம் விடாமல், தமிழக அரசின் உள்துறை மூலம் ஒப்படைத்து, நகைகளை தமிழ்நாடு அரசுக்கு மாற்றுவது நல்லது என கருதுகிறேன். அதன்படி, போலீசாருடன் இணைந்து, செயலர் அந்தஸ்தில் உள்ளவரை தமிழ்நாடு அரசு நியமிக்கவேண்டும். திறமையான நபர்களை நியமித்து, நகைகளை பெற்றுச் செல்லுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சென்னை கிளையின் தலைமை மேலாளருக்கு, கர்நாடக அரசின் பெயரில் ரூ.5 கோடிக்கான டிமாண்ட் டிராப்டை (demand draft (DD)) அனுப்பவும், சிறப்பு அரசு வழக்கறிஞர் மூலம் கணக்குத் தலைவருக்கு அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதா, அவரது நெருங்கிய உதவியாளர் வி.சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகர் மற்றும் ஜே.இளவரசி ஆகியோர் மீதான வழக்குகளின் விசாரணையை நடத்துவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்ட செலவினங்களுக்காக இந்த ஐந்து கோடி ரூபாய் வழங்கப்படும்.
இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு அரசு வக்கீல் கிரண் ஜாவலி, சமீபத்தில், ஜெயலலிதா தொடர்பான வங்கிக் கணக்குகளில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை குறித்த தகவல் சிறப்பு நீதிமன்றத்திற்கு கிடைத்ததாக தெரிவித்திருந்தார். “மொத்தம் 6 கோடி ரூபாய்க்கு கொஞ்சம் அதிகமாக இருந்தது. டிடி மூலம் அரசுக்கு ரூ.5 கோடி அனுப்பப்படும்,'' என்று அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க - தமிழக கோவில்களில் அடக்குமுறையா? ஆளுநர் ரவி, நிர்மலா சீதாரமன் சொல்வது என்ன?
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக 1996ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. அப்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த சோதனையில் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள் என அவருடைய நகைகள் மற்றும், அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட்டு கிடைக்கும் பணத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதேபோல, பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களில் தனக்கு உரிமை உண்டு எனவும், அவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம், நேற்று வெளியிட்ட தீர்ப்பில், தமிழ்நாடு அரசிடம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட உடைமைகளை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இவை அனைத்தும் தற்போது கர்நாடகா கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
பொருட்களை ஏலம் விடுவதற்கு, கிரண் ஜவளி என்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு உள்ளார். வழக்கு விசாரணையில் போது ஜெயலலிதாவின் சொத்து விபரங்களை, வழக்கறிஞர் கிரண் ஜவளி தாக்கல் செய்தார். அப்போது தமிழகத்தில் இருந்து, கர்நாடகாவுக்கு வழக்கை மாற்றியதால், கர்நாடகாவுக்கு வழக்கு செலவாக, வரைவோலை வாயிலாக 5 கோடி ரூபாய் செலுத்த, தமிழக அரசுக்கு, நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.
அடுத்த விசாரணையின் போது தமிழக உள்துறை செயலர் ஆஜராகி, ஜெயலலிதாவின் பொருட்களை அடையாளம் காட்ட வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ