இந்தியாவில் மிகப்பெரிய போக்குவரத்தாக ரயில்வே உள்ளது. தினசரி லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். மற்ற போக்குவரத்துகளை விட ரயிலில் பயணம் செய்வது மிகவும் சௌகரியமாக இருக்கும். குறிப்பாக வயதானவர்கள் பயணிக்க ரயில்வே அதிகம் உதவிகரமாக இருக்கும். பேருந்து மற்றும் கார்களில் செல்வதை விட ரயிலில் செல்வது பணத்தையும் அதிகம் மிச்சப்படுத்தும், இதற்காகவும் பலர் ரயிலை தேர்வு செய்கின்றனர். ஆனால் ரயிலில் பயணம் செய்யும்போது இந்திய ரயில்வேயின் சில விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், இல்லையென்றால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும் படிக்க | அவசரமா கடன் வேணுமா... எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? காசை மிச்சம் பண்ண இதை படிங்க
இரவில் மொபைல் போன்கள் சார்ஜ் செய்யக்கூடாது
ரயில் பயணம் செய்யும்போது உங்களுடைய லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால் இரவு நேரங்களில் இவற்றை சார்ஜ் செய்ய வேண்டாம் என்று ரயில்வே அறிவுறுத்துகிறது. காரணம் இவற்றில் இருந்து எளிதில் தீ பற்றக்கூடும் என்பதால் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ரயிலில் மொபைல் மற்றும் லேப்டாப்பை சார்ஜ் செய்ய வேண்டாம் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் இந்த விதிகள் அமலில் உள்ளது.
இந்த விதிகள் புதிதானது அல்ல, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில்தான் உள்ளது. 2014 ஆம் ஆண்டு பெங்களூரு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ரயில்களில் பயணிகள் சார்ஜ் செய்ய அனுமதி இல்லை என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ரயில்களில் ஏற்படும் தீ விபத்துகளை கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது, இவை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ரயில் உள்ள சார்ஜிங் போர்டில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரயில்களில் ஒரு பட்டியில் தீ விபத்து ஏற்பட்டாலும் அவை உடனடியாக மற்ற பெட்டிகளுக்கும் பரவக்கூடிய அபாயம் உள்ளது. சிலர் தங்களது மொபைல் ஃபோன்களை இரவு முழுவதும் சார்ஜ் செய்கின்றனர், அப்போது பேட்டரி அதிகம் சூடாகி வெடிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களுக்கு மட்டும் இல்லாமல், ரயில் பயணம் செய்யும் மற்ற பயணிகளுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விதிகளை இந்திய ரயில்வே வகுத்துள்ளது. எனவே அடுத்த முறை நீங்கள் ரயிலில் பயணம் செய்யும்போது இரவு மொபைல் மற்றும் லேப்டாப்பில் சார்ஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது. அவசர காலங்களுக்கு பவர் பேங்க்குகளை உடன் எடுத்துச் செல்லுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ