ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட்நியூஸ் - அரிசிக்கு பதிலாக இந்த பொருள் வழங்க தமிழ்நாடு அரசு திட்டம்

Ration Card | ரேஷன் கடைகளில் அரசிக்கு பதிலாக சிறுதானியம் ஒன்றை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழுமையான தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 31, 2025, 06:50 AM IST
  • ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட்நியூஸ்
  • விரைவில் அரிசிக்கு பதில் கேழ்வரகு வழங்க திட்டம்
  • விருப்பம் உள்ளவர்கள் வாங்கிக் கொள்ளலாம்
ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட்நியூஸ் - அரிசிக்கு பதிலாக இந்த பொருள் வழங்க தமிழ்நாடு அரசு திட்டம் title=

Ration Card Good News | திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான உணவுத் திருவிழாவில் பேசிய உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அப்போது, பொது விநியோக திட்டத்தின் கீழ் தற்போது நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு கொடுப்பதாக தெரிவித்தார். பரிசோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, மக்களின் ஆரோக்கியத்தையும் உணவுப் பொருளையும் கருத்தில் கொண்டு விரைவில் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. சிறுதானிய உணவுகளை ஊக்குவிக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் சிறுதானியங்களை விற்பனை செய்யவும் தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது.

அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, " தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்பு தமிழ்நாட்டில் சிறுதானியங்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. சிறுதானிய உணவு வகைகள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக தருமபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகு வழங்க வேண்டும் என்று முடிவு செய்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக எதிர்வரும் காலங்களில் அரிசிக்கு பதிலாக சிறுதானியங்களை அதிகமாக உட்கொண்டால் உடல் ஆரோக்கியமாக வாழலாம். சிறுதானியங்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பெற்ற பின்பு தமிழகத்தில் உள்ள 2 கோடியே 21 இலட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொது விநியோக திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து ராகி நேரடி கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் இம்மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார்.

அமைச்சர் பெரியசாமி பேசும்போது, " சிறுதானிய உணவு வகைகள் பயன்பாட்டை துாண்டுவதற்காக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார்.

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் ஆர்வத்துடன் முன்வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் சிப்காட் கொண்டுவர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறுதானிய உணவு வகைகள் மற்றும் அதன் பயன்களை அறிந்து தொடர்ந்து பயன்படுத்துவதுடன், உறவினர்கள், நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசும்போது, " தமிழ்நாடு முழுவதும் 37,000 நியாயவிலைக்கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களின் பணியை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. பொதுவிநியோகத்திட்டத்தை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் சிறப்பான சேவை செய்து வருகிறது. தமிழ்நாட்டை போல் மற்ற மாநிலங்களிலும் பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்திட மாண்பமை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது" என கூறினார்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டில் பிரச்சனை உள்ளதா? தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு : இனி சீக்கிரம் கிடைக்கும்... தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News