தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர். இதை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதையடுத்து, துப்பாக்கிசூடு விவகாரம் குறித்த விசாரணையை ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை செய்து வருகிறார். இதன் வழக்கு விசாரணையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து சிறப்பு விசாரணைக்குழு கோரி தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என்றும் கருதி தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது அப்போது, துப்பாக்கிச்சூடு வழக்குகள் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இதன் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.