இந்த 2 டீம்தான் பைனலுக்கு வரும்.. அடித்து சொல்லும் ஜாம்பவான்கள்!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.  

Written by - R Balaji | Last Updated : Feb 2, 2025, 10:49 AM IST
  • சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19 தொடங்குகிறது
  • இந்த இரு அணிகள்தான் இறுதி போட்டிக்கு முன்னேறும்
  • ரிக்கி பாண்டிங் மற்றும் ரவி சாஸ்திரி கணிப்பு
இந்த 2 டீம்தான் பைனலுக்கு வரும்.. அடித்து சொல்லும் ஜாம்பவான்கள்! title=

Champions Trophy 2025: உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கும் இத்தொடர் மார்ச் 09ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் குரூப் பி-யிலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் குரூப் ஏ-விலும் உள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகளில் விளையாடி அதில் முன்னிலை பெறும் 4 அணிகள் அரை இறுதி போட்டிக்கு முன்னேறும். 

7 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுவதால் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எனவே எந்த அணி அரை இறுதி போட்டி முன்னேறும், எந்த அணி இறுதி போட்டி முன்னேறி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் தற்போதே கணித்து வருகின்றனர். 

மேலும் படிங்க: Naman Awards 2025: எந்தெந்த வீரர்களுக்கு என்னென்ன விருதுகள்...? முழு லிஸ்ட்

இந்திய - ஆஸ்திரேலியா அணிகள்தான் இறுதி போட்டிக்கு முன்னேறும்

இந்த நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் மற்றும் முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி எந்த அணி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு முன்னேறும் என தங்களது கணிப்பை கூறியுள்ளனர். 

ஐசிசி ரிவியூவின் சிறப்பு எபிசோடில் சஞ்சனா கனேஷனிடம் இது குறித்து இருவரும் பேசி உள்ளனர். அவர்கள் இருவரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு முன்னேறும் என தெரிவித்துள்ளனர். 

அதேபோல் அரை இறுதி போட்டிக்கு மற்றொரு அணிகளாக இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா முன்னேறும் என இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார். 

இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது, இது போன்ற தொடர்களில் இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும் கடந்து சொல்வது கடினம் தான். இரு அணிகளில் உள்ள வீரர்களின் தரம் குறித்து யோசித்து பாருங்கள். அதேபோல் சமீபத்திய ஐசிசி தொடர்களில் இரு அணிகளின் ஆளுமையை யோசித்து பாருங்கள். எனவே இந்த இரு அணிகள் தான் இறுதி போட்டிக்கு வர அதிக வாய்ப்பு என்றார். 

பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி வருகிறது

தொடர்ந்து பேசிய அவர், தற்போது சிறப்பாக விளையாடி வரும் மற்றொரு அணி பாகிஸ்தான். கடந்த சில நாட்களாக அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டை சிறப்பாக விளையாடி வருகின்றனர். பொதுவாக பெரிய போட்டிகளில் இவர்கள் எப்போது கணிக்கக்கூடிய அணியாக இருக்காது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் தற்போது அவர்களது தவறுகளை சிறிது சரிசெய்து கொண்டதாக தெரிகிறது எனத் தெரிவித்தார். 

மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா - பாகிஸ்தன் போட்டி.. மனம் திறந்த ரோகித் சர்மா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News