New Tax Regime & Income Tax Slab: பொது பட்ஜெட் 2025 பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடுத்தர மக்களுக்கு பெரும் நிவாரணம் அளித்தார். ரூ.12 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு பூஜ்ஜியம் வரி என்ற ஜாக்பாட் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், புதிய வருமான வரி முறையில், வரி அடுக்குகள் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.12 லட்சத்திற்கு அதிகமான ஆண்டு வருமானம் உள்ளவர்கள் எவ்வளவு வரியை சேமிப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
வரிச் சலுகை அறிவிப்பு
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் (Budget 2025) , ரூ. 12 லட்சம் வருமானத்துக்கு வரிச் சலுகை அளித்தது. புதிய வரி முறையின் கீழ் அனைவரும் இந்த பலனைப் பெறுவார்கள். ஆனால், பழைய வரி முறை குறித்த மாற்றம் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், ரூ.12 லட்சத்திற்கு அதிகமான ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு எவ்வளவு ஆதாயம் கிடைக்கும் என்னும் ஆர்வம் மக்கள் மத்தியில் உள்ளது.
வருமான வரியின் 87A பிரிவின் கீழ் வரி விலக்கு
வரி செலுத்துவோர் வருமான வரியின் 87A பிரிவின் கீழ் வரி விலக்கு பெறுவார்கள். 12 லட்சம் வரையிலான வருமானம் வரி விலக்கு அளிக்கப்பட்ட, நிலையில், இப்போது மக்கள் கையில்,செலவழிக்க அதிக பணம் இருக்கும். இருப்பினும், 13 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட வருமானத்திற்கு வரி விதிக்கப்படும். எனினும் வரி அடுக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவர்களுக்கு வரிச் சுமை குறையும்.
ரூ.12 லட்சம் ஆண்டு வருமானத்தில் 80 ஆயிரம் வரி சேமிக்கப்படும்
ரூ.12 லட்சம் வரை வருமானத்தில் ரூ.80 ஆயிரம் வரி சேமிப்பு இருக்கும். ஆண்டு வருமானம் ரூ.16 லட்சத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரி சேமிப்பும், ஆண்டு வருமானம் ரூ.20 லட்சம் என்றால் ரூ.90 ஆயிரம் என்ற அளவிற்கு வரி சேமிப்பும், ஆண்டு வருமானம் ரூ.24 லட்சம் என்றால் ரூ.1.10 லட்சம் என்ற அளவிற்கு வரி சேமிப்பும், ஆண்டு வருமானம் ரூ.50 லட்சத்துக்கு ரூ.1.10 லட்சம் என்ற அளவிற்கு வரி சேமிப்பும், இருக்கும்.
புதிய வரி முறையில் வருமானமும் அதற்கான வரி சேமிப்பு விபரமும்
வருமானம் | புதிய வரி முறையில் வரி | வரி சேமிப்பு |
ரூ12 லட்சம் | 0 | ரூ.80,000 |
ரூ.16 லட்சம் | ரூ.1.20 லட்சம் | ரூ.50,000 |
ரூ20 லட்சம் | ரூ. 2 லட்சம் | ரூ. 90 ,000 |
ரூ.24 லட்சம் | ரூ.3 லட்சம் | 1.10 லட்சம் |
ரூ.50 லட்சம் | ரூ.10.80 லட்சம் | ரூ.1.10 லட்சம் |
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ