புதுடெல்லி: தமிழக பாஜக தலைவராக இருக்கும் எல்.முருகன் மத்திய அமைச்சரவைக்கு தேர்வு செய்யப்பட்டதால் அந்த பதவிக்கு இந்திய காவல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்த அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
BJP president JP Nadda has appointed former Karnataka IPS officer K Annamalai as State president of Tamil Nadu. pic.twitter.com/bKou3S8pzv
— ANI (@ANI) July 8, 2021
டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு எல். முருகன் பாஜக தலைவரானார். எல்.முருகன் மத்திய அமைச்சராக அறிவிக்கப்பட்டதும், மாநில தலைவர் பதவிக்கு பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் இருவருக்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. இவர்கள் இருவரும் எம்.எல்.ஏவாக இருப்பதால் அண்ணாமலைக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
Also Read | மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
பாஜக தலைவர் எல்.முருகன், எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தில்லிக்கு பயணித்தனர் .ஆனால், பாஜக மேலிடம், தமிழக தலைவராக, துடிப்பான இளைஞர் ஒருவரை நியமிக்க திட்டமிட்டு அண்ணாமலைக்கு அந்த பதவியை கொடுத்திருக்கிறது.
கர்நாடக மாநில ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை, கடந்த 2018ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார். கட்சியின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது மாநிலத் தலைவராக பொறுப்பு வகிப்பார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ALSO READ | பாஜகவுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் கருத்து.. கூட்டணி தொடருமா? ஓபிஎஸ் ட்வீட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR