அரசு ஓய்வூதியதாரர்களுக்கான பென்ஷன் தேதி குறித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு

Pension News In Tamil: அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மாத பென்சன் கொடுக்கும் தேதி மாற்றம் குறித்து வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Government Pensioners News In Tamil: வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதில் காலதாமதம் குறித்து புகார்கள் வந்ததை அடுத்து மத்திய நிதி அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. 

1 /10

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மாத பென்ஷன் கொடுக்கக்கூடிய தேதி மாற்றம் குறித்து அரசு சார்பில் அதிரடியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவானது எந்த வகையை சார்ந்த அரசு ஓய்வூதியதாரர்களுக்கு பொருந்தும்? என்ன வகையான மாற்றங்கள் சார்ந்து அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது? அதேபோல ஓய்வூதியதாரர்களுக்கு எந்த வகையில இது பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

2 /10

மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் ஊழியர்களுக்கும், அவர்கள் இறந்த பின்பு ஊழியர்களுடைய குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமானது வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கக்கூடிய ஓய்வூதிய பணம் என்பது வங்கிகள் மூலமாக நேரடியாக வங்கிக் கணக்கு வைத்திருக்கக்கூடிய ஓய்வூதியதாரர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 

3 /10

வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்து வந்தது. இந்த நிலையில ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய பணத்தினை வரவு வைப்பது குறித்து வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. 

4 /10

ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாட்களில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்தை வரவு வைக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. 

5 /10

அதாவது ஓய்வூதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் இதன் காரணமாக நிதிச்சுமையும், மனக்கவலையும் ஏற்படுவதாகவும் ஓய்வூதியதாரர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வருகிறது. 

6 /10

இது தொடர்பாக ஓய்வூதியம் வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளுக்கு நிதி அமைச்சகத்தின் சார்பில் அலுவலகக் குறிப்பு கடந்த மாதம் வந்து அனுப்பப்பட்டிருக்கிறது. 

7 /10

அதில் மார்ச் மாதத்தைத் தவிர மற்ற அனைத்து மாதங்களுக்கான ஓய்வூதியம், அந்தந்த மாதத்தினுடைய கடைசி வேலை நாள் அன்று ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

8 /10

வங்கி கணக்கு முடித்தல் காரணமாக மார்ச் மாதத்திற்கான ஓய்வூதியம் மட்டும் ஏப்ரல் மாதத்தினுடைய முதல் வேலை நாள் அன்று செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும் இந்த நடைமுறையை பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில வங்கிகள் ஓய்வூதியத்தை வரவு வைத்த உடனே, அன்றே மின்னணு அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 

9 /10

இதனை கடைபிடிக்க தவறினால் சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

10 /10

இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அந்தந்த மாதத்தினுடைய ஓய்வு ஊதியமானது, அந்த மாதத்தினுடைய கடைசி வேலை நாள் அன்று அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல மார்ச் மாதத்தை பொறுத்த அளவில் அந்த மார்ச் மாதத்தினுடைய ஓய்வூதியம் என்பது அதற்கு அடுத்த மாதம், அதாவது ஏப்ரல் மாதத்தினுடைய முதல் வேலை நாளில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.