இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் தான் கடைசியாக விளையாடினார். அதன் பின்னர் அவர் காயம் காரணமாக ஒராண்டுக்கும் மேலாக விளையாடவில்லை. பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் அவரால் விளையாட முடியாமல் போனது.
ஓராண்டு பின் சர்வதேச போட்டியில் முகமது ஷமி
தற்போது அவர் முழு உடற்தகுதியை அடைந்துள்ளார். இன்று நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அவர் விளையாடுகிறார். இதன் மூலம் ஓராண்டுக்குப் பின்னர் சர்வதேச போட்டியில் அவர் காலேடுத்து வைக்கிறார்.
After testing times & a long wait, he is back to don the blues
For Mohd. Shami, it's only "UP & UP" from here on
WATCH #TeamIndia | #INDvENG | @MdShami11 | @IDFCFIRSTBank https://t.co/V03n61Yd6Y
— BCCI (@BCCI) January 22, 2025
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் அவர் தேர்வாகியுள்ளார். இவரின் வருகைக்காக இந்திய அணி மட்டுமல்லாது ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்த நிலையில், முகமது ஷமி இந்த ஓராண்டு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை பகிர்ந்துள்ளார்.
மேலும் படிங்க: உடலுறவுக்கு உங்கள் வயது தடையா இருக்கா? இதை ஃபாலோ பண்ணுங்க!
மனம் திறந்த முகமது ஷமி
"நாம் அணிக்காக விக்கெட்களை எடுக்கும் போதும் ரன்களை அடிக்கும் போதும் பலர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆனால் உண்மையில் நமது கடினமான காலத்தில் நம் உடன் யார் இருக்கிறார் என்பதில் தான் இருக்கிறது.
ஓராண்டாக நான் இந்த திருணத்திற்க்காக காத்திருந்தேன். முழு உடல் தகுதியை பெற கடினமாக உழைத்தேன். பயிற்சியில் ஓடும் போது பயந்தேன், எனக்கு மீண்டும் காயம் ஏற்பட்டு விடுமோ என்று. நல்ல ஃபார்மில் இருந்த போது காயம் ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வருவது என்பது எந்த ஒரு வீரருக்கும் கடினம்.
கடுமையாக உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்
ஆனால் ஒவ்வொரு முறையும் காயம் அடைந்து அதில் இருந்து கம்பேக் கொடுக்கும் போது ஒரு விளையாட்டு வீரராக நான் வளர்ந்து வருவதை உணர்ந்தேன். ஏனென்றால் நாம் ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும் போது நமது மன வலிமை அதிகரிக்கும்.
நீங்கள் கடுமையாக உழைத்தால் நிச்சயம் ஒருநாள் நீங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். இதை நான் நம்புகிறேன். நீங்கள் பட்டம் விட்டலும் சரி, பந்து வீசினாலும் சரி முதலில் உங்களை நம்புங்கள். அப்போது தான் உங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்தார்.
மேலும் படிங்க: மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகிறேன் - டிவில்லியர்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ