சென்னை: அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக ஆட்சியை இழந்தது. திமுக தலைமையிலான ஆட்சி சிம்மாசனத்தைக் கைப்பற்றியது.
இரும்புப் பெண்மணி என அறியப்பட்ட ஜெயலலிதாவின் நிர்வாகத்தில் கட்சியில் கட்டுக்கோப்பு நிலவியது. அதிமுகவில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு பல்வேறு பூசல்கள் உருவெடுத்தன.
முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் இருந்தது, பிறகு ராஜினாமா செய்தது, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானது, சசிகலா பொதுச்செயலாளர் ஆனது, தினகரனின் செல்வாக்கு, சசிகலா சிறைக்கு சென்றது என கடந்த மூன்றாண்டுகளில் அதிமுகவின் நிலை ஊசலாடிக் கொண்டிருந்தது.
Also Read | 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!
ஆனால், முதலமைச்சராக பணியாற்றிய எடப்பாடி பழனிச்சாமி சாதுரியமாக அனைவரையும் அரவணைத்துச் சென்று தனது முதலமைச்சர் பணியை செவ்வனே செய்தார்.
இந்த நிலையில் வந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக தோல்வியைத் தழுவி எதிர்கட்சியானது. இப்போது, ஓ.பி.எஸ் கட்சியின் உட்கட்சிப் பூசலால் தேர்தல் தோல்வி ஏற்பட்டதாக வெளிப்படையாக பேசுகிறார்.
பேசுவதோடு மட்டுமல்லாமல், உள்ளடி வேலை பார்த்து கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை தோற்கடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருவதால் கட்டுக்கோப்புக்கு பெயர் போன அந்தக் கட்சியில் கட்டுப்பாடுகள் கட்டவிழிந்து விட்டது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகிறது.
Also Read | மே 19 முதல் இந்திய கிரிக்கெட் அணி Bio-bubble தனிமைப்படுத்தலுக்கு செல்கிறது
தேர்தல் பணிகளின்போதே முதலமைச்சர் வேட்பாளர், வேட்பாளர் தேர்வு என பல விஷயங்களில் எடப்பாடிக்கும், ஓபிஎஸ்க்கும் இடையில் பல முறை பூசலும், விரிசலும் ஏற்பட்டு இறுதியில் சமரசம் செய்துக் கொண்டனர்.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்திற்காக செய்யப் பட்ட சமரசங்கள் அனைத்தும் வீணாய் போய் அதிமுக எதிர்கட்சியானது.
முதலமைச்சராக இருந்ததால், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதிக்கம் சற்று அதிகமாக இருந்தது. முதலமைச்சர் வேட்பாளராகவும் அவர் முன் நிறுத்தப்பட்டார். அதோடு, வேட்பாளர் தேர்விலும் முதல்வரின் விருப்பமே முதன்மை பெற்றது.
Also Read | 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டர் : தமிழக அரசு
அதிருப்தி அடைந்த ஓபிஎஸ், தேர்தலில் தனியே பிரசாரம் செய்தார். ஆனால், கச்சேரி களை கட்டாமல், தனி ஆவர்தனத்தனம் ஆனது. சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு தோல்விதான் கிடைத்தது.
இதனால் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வம், தனது ஆதரவாளர்களை எதிரணியினர் திட்டமிட்டே தோற்கடித்துவிட்டது என்று குமுறிக் கொண்டிருக்கிறார்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியாவது கிடைத்தால் பரவாயில்லை என்று ஓபிஎஸ் நினைக்க அதுவும் நடக்கவில்லை. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
Also Read | தமிழ் பஞ்சாங்கம் 16 மே, 2021: இன்றைய நல்ல நேரம், சுப ஹோரைகள்
கடும் அதிருப்திக்கு உள்ளான ஓபிஎஸ் அறிக்கைகள் மூலம் தனது கோபத்தை அவ்வப்போது அம்பலப்படுத்தி வருகிறார். ஓ.பி.எஸ்ஸின் சீற்றத்தைத் தணிக்க எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை தருவதற்கு ஈபிஎஸ் அணி தீவிரமாக சமாதானப் பேச்சு நடத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில் சட்டசபை தேர்தலில் தாங்கள் எப்படி தோற்கடிக்கப்பட்டோம்; யார் உள்ளடி வேலை பார்த்தார்கள் என்பதை பக்கம் பக்கமாக விவரிக்கும் மனுக்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. மனுக்களில் பெரும்பாலும் எடப்பாடி ஆதரவாளர்கள் மீதான குற்றச்சாட்டுகள்தான் இருப்பதாக கூறப்படுகிறது.
இது வேண்டுமென்றே செய்யப்படும் நாடகம் என எடப்பாடி அணி சொன்னாலும், உள்ளுக்கும் அவர்களுக்கும் அச்சம் இருக்கிறது. ஆனால் எது எப்படியிருந்தாலும், இப்போது யார் எந்த சமாதிக்கு சென்று தியானம் செய்தாலும் எந்த பயனும் இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும்.
Also Read | இன்றைய ராசிபலன், 16 மே 2021: விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR