அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

அதிமுகவின் முன்னாள் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Jul 8, 2022, 07:41 AM IST
  • காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை.
  • வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்.
  • 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! title=

கடந்த ஆண்டு திமுக அரசு ஆட்சி பொறுப்பில் வந்ததில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர் வீடுகளில் நடத்தப்படும் ரெய்டு அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது.  முன்னாள் அமைச்சர் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

kamaraj

மேலும் படிக்க | எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! கிளைமாக்ஸ் நாளை

காமராஜ்க்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.  வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்த வழக்கில் மான்னார்குடியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.  காமராஜரின் உறவினர் மற்றும் அவரது நண்பர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  சென்னையில் முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.  சென்னை, திருவாரூர், தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் உள்ள 49 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

kamaraj

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை பெரிதாக வெடித்து வரும் நிலையில் தற்போது நடத்தப்படும் இந்த ரெய்டு அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  வரும் 11ம் தேதி பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது.  

மேலும் படிக்க | 2வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை -சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News