நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி கட்சி பெயரை அறிவிக்கிறார், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்து வந்த நிலையில், பல்வேறு விமர்சனங்களை அவ்வப்போது டிவிட்டரில் வெளியிட்டு வருகிறார்.
இதுபற்றி நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தின் நாயகர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். உங்கள் ஆதரவோடு இந்த பயணத்தை துவக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தலைவன் வழிநடத்தவே இருக்க வேண்டும். என்னை வளர்த்தெடுத்த சமூகத்திற்கு நன்றி தாண்டி ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இந்த சந்திப்பு புரட்சிக்காகவோ, கவர்ந்திழுக்கவோ அல்ல, எனது புரிதல் மற்றும் எனது கல்விக்காக மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், பிப்ரவரி 21-ந் தேதி கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளேன். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் இருந்து மக்களை சந்திக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன்.
ராமநாதபுரத்தில் தொடங்கி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளேன். மக்கள் ஆதரவுடன் இந்த சுற்றுப் பயணத்தை தொடங்குகிறேன் என்றார்.
மேலும், கட்சி மற்றும் சுற்றுப் பயணம் தொடர்பான அறிக்கை புதன்கிழமை கமல் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
#TamilNadu Actor Kamal Hassan to begin a state-wide tour on Feburary 21 from his home town Ramanathapuram. He will also announce the name of his political party and its guiding principles at the commencement of the tour. (File Pic) pic.twitter.com/IHReSp3EGG
— ANI (@ANI) January 17, 2018