தமிழகத்தில் சென்னை உட்பட வடமாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது!!
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில் தொடங்கியது, இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால், தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில்..!
சென்னை உட்பட வடமாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவிழந்தது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளாது.