சேவாக், ரோகித் சர்மாவை விட அதிரடி பேட்ஸ்மேன் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது..!

Prithvi Shaw | சேவாக், ரோகித் சர்மாவை விட அதிரடி பேட்ஸ்மேனாக வருவார் என கணிக்கப்பட்ட இந்திய இளம் வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 10, 2025, 01:21 PM IST
  • பிரித்திவி ஷா கிரிக்கெட் வாழ்க்கை
  • விரைவில் முடிவுக்கு வரப்போகிறது
  • 25 வயதில் ஏற்பட்ட சோகமான கிரிக்கெட் வாழ்க்கை
சேவாக், ரோகித் சர்மாவை விட அதிரடி பேட்ஸ்மேன் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது..! title=

Prithvi Shaw | இந்தியாவில் திறமையான கிரிக்கெட் வீரர்கள் பலர் இருக்கும் நிலையில், சேவாக் மற்றும் ரோகித் சர்மா பேட்டிங் ஸ்டைலோடு ஒப்பிடப்பட்ட இந்திய இளம் கிரிக்கெட் பேட்ஸ்மேனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறது. அதிரடி பேட்ஸ்மேனான அவர், இனி இந்திய அணியில் இடம்பிடிப்பது மிகவும் கடினம். 25 வயதிலேயே கிரிக்கெட் வாழ்க்கை முடியப்போகிறது என்பது தான் அதிர்ச்சியான செய்தி. அவர் வேறு யாருமல்ல, பிரித்திவி ஷா தான். இவருக்கு இந்திய அணியில் அண்மைக்காலமாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த அவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் லைம் லைட்டில் இல்லாத பிளேயராக மாறிவிட்டார். ஐபிஎல் தொடரிலும் எந்த அணியும் இவரை ஏலம் எடுக்கவில்லை. 

பிரித்திவி ஷா பேட்டிங்

அதிரடி பேட்ஸ்மேன் என பெயர் பெற்ற தொடக்க வீரர் பிரித்வி ஷா, கடந்த மூன்றரை ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 'ஹிட்மேன்' ரோஹித் சர்மாவை விட தான் மிகவும் ஆபத்தானவர் என்பதை பிருத்வி ஷா நிரூபித்துள்ளார். ஜனவரி 11, 2023 அன்று அசாமுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் 383 பந்துகளில் 379 ரன்கள் எடுத்து பிரம்மிக்க வைத்தார் பிரித்வி ஷா. அந்த இன்னிங்ஸை யாரால் மறக்க முடியும். பிருத்வி ஷாவின் இந்த அபாரமான இன்னிங்ஸில் 49 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களும் அடங்கும்.

இந்திய அணியில் வாய்ப்பு இல்லை

நல்ல பார்ம் மற்றும் திறமை இருந்தபோதிலும், பிருத்வி ஷாவுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதிரடியாக ஆடக்கூடியவர் பிருத்வி ஷா. சில ஓவர்களில் போட்டியின் முடிவை மாற்றக்கூடிய பிளேயரான இவர், 2021 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடினார். அப்போது, அடுத்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் என்றெல்லாம் இவருக்கு புகழ் மாலை கிடைத்தது. இந்தியாவுக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரித்வி ஷா 339 ரன்கள் எடுத்துள்ளார். பிரித்வி ஷா 6 ஒருநாள் போட்டிகளில் 189 ரன்கள் எடுத்துள்ளார். பிரித்வி ஷா 79 ஐபிஎல் போட்டிகளில் 1892 ரன்கள் எடுத்துள்ளார். பிரித்வி ஷா டெஸ்ட் போட்டிகளில் 1 சதம் அடித்துள்ளார். இருப்பினும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

உலகக் கோப்பை வென்ற கேப்டன்

இவருக்கு பதிலாக ஜெய்ஷ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வாய்ப்பு கொடுக்கிறது. 2018 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பிருத்வி ஷாவின் தலைமையில் ஷுப்மான் கில் விளையாடினார். அதில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. இதன் காரணமாக இந்திய சீனியர் அணியிலும் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவங்களிலும் இவருக்கு இந்திய அணிக்காக வாய்ப்பு வழங்கப்பட்டது. 

பிரித்திவி ஷா ஒழுங்கீனம்

ஆனால் இவரது நடத்தையின் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பை இழந்தார். பொது இடங்களில் சில சர்ச்சைகளில் சிக்கினார். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளின் போது நேரத்துக்கு பயிற்சிக்கு வராமல் இருப்பது உள்ளிட்ட சில சர்ச்சைகளில் சிக்கினார். பிட்னஸாக இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இவர் மீது வைக்கப்பட்டது. இருப்பினும் தன்னுடைய அணுகுமுறையை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இதன் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பை இழந்த பிரித்திவி ஷா, வரும் ஐபிஎல் தொடரிலும் எந்த அணியும் இவரை ஏலம் எடுக்கவில்லை. இதனால், அவரின் கிரிக்கெட் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியில் இருக்கிறது. இதில் இருந்து மீண்டு வருவாரா? என்பதற்கான விடை அவர் வசமே இருக்கிறது.

மேலும் படிக்க | இந்தியா vs இங்கிலாந்து: டி20, ஒருநாள் தொடர் முழு அட்டவணை விவரம்..!

மேலும் படிக்க | இந்தி தேசிய மொழி அல்ல.... அலுவல் மொழி மட்டுமே - அஸ்வின் பரபரப்பு பேச்சு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News