பொங்கல் பரிசு வழங்கப்படாது என ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் - மக்கள் ஏமாற்றம்

Pongal gift | ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பரிசு வழங்கப்படாது என அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 9, 2025, 03:41 PM IST
  • பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காது
  • ஈரோட்டில் ஒட்டப்பட்டிருக்கும் நோட்டீஸ்
  • ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி
பொங்கல் பரிசு வழங்கப்படாது என ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் - மக்கள் ஏமாற்றம் title=

Pongal gift Erode | தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி, இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த பொங்கல் பரிசு தொகுப்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் வழங்கப்படாது என அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. அதாவது,ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மறு அறிவிப்பு வரும் வரை பொங்கல் தொகுப்புகள் வழங்கப்படாது எனவு தெரிவிக்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் பார்த்து குடும்ப அட்டை உறுப்பினர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்‌. 

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 5ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் நடத்தை காரணமாக பொங்கல் தொகுப்பு வழங்கப்படவில்லை என்றும், இதற்காக அனுமதி கேட்டிருப்பதாகவும் அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் தொகுப்பு வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மொத்தமாக ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 1233 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | பொங்கல் 2025 | ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு... இன்றே வருது 1000 ரூபாய்!

இவற்றில்  7,45,842 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்க உள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கிழக்கு தொகுதியில் 100க்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கவில்லை. இதனால் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு பொங்கல் தொகுப்பு வழங்க தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் தரப்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொங்கல் தொகுப்பு வழங்கவில்லை என்றும் பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து அரசிடம் தெரிவித்துள்ளதாகவும் அனுமதி கிடைத்தவுடன் அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இரண்டாவது முறையாக நடக்கிறது. அந்த தொகுதி எம்எல்ஏ -வாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். அவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன். அவர் மாரடைப்பு காரணமாக காலமானதையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இதனைத் தொடர்ந்து இந்த தொகுதிக்கு இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடக்கிறது. 

மேலும் படிக்க | பொங்கல் பரிசு தொகுப்பு : ரேஷன் கார்டு இருந்தாலும் கிடைக்காது - ஏன் தெரியுமா?

மேலும் படிக்க | Pongal 2025: போகி முதல் காணும் பொங்கல் வரை... தெரிந்துகொள்ள வேண்டிய சடங்குகள்!

மேலும் படிக்க | Pongal 2025 Kolam: பொங்கலுக்கு இந்த கோலங்களை போடுங்க, தெருவே திரும்பிப்பார்க்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News