இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்திருக்கும் இந்திய அணி, கடைசி 20 ஓவர் போட்டியில் தோல்வியை தழுவியது. அந்தப் போட்டியில் புவனேஸ்வர் குமார், பும்ரா போன்ற சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு உம்ரான் மாலிக், ஆவேஷ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவரில் 215 ரன்கள் குவித்தது.
ஹர்ஷல் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த, எஞ்சிய 3 பவுலர்கள் 10-க்கும் மேற்பட்ட எக்கானமியில் ரன்களை வாரி வழங்கினார். குறிப்பாக உம்ரான் மாலிக் 4 ஓவர்களை வீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்து 56 ரன்களை வாரி வழங்கினார். ஐபிஎல் போட்டியில் 150 கி.மீ வேகத்தில் அனைவரது கவனத்தை ஈர்த்தாலும், ரன்களை வாரி வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
22 வயதிலேயே ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்தை வீசிய இந்திய பவுலராக என்ற சாதனை படைத்திருந்தாலும் ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும் என முன்னாள் வீரர்கள் வலியுறுத்துகின்றனர். இவரின் அதிவேக பந்துவீச்சுக்காக 20 ஓவர் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் கபில்தேவ் ஆகியோர் வலியுறுத்திய நிலையில், 20 ஓவர் அணியில் உம்ரான் மாலிக்கை தேர்வு செய்திருக்கக்கூடாது என மதன் லால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, உம்ரான் மாலிக் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவருக்கு முதிர்ச்சி தேவைப்படுகிறது. அத்தகைய அனுபவம் வேண்டும் என்றால் உம்ரான் மாலிக் முதலில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போது தான் அவருக்கான அனுபவம் கிடைக்கும். அங்கு கற்றுக் கொண்டதை எளிதாக 20 ஓவர் போட்டிகளில் செயல்படுத்தவும் உதவியாக இருக்கும். 20 ஓவர் அணிகளில் விளையாட வாய்ப்புக் கொடுப்பதை தவிர்த்து, இந்திய டெஸ்ட் அணியில் உம்ரான் மாலிக்கை சேர்ப்பது குறித்து தேர்வாளர்கள் பரிசீலிக்க வேண்டும் எனவும் மதன் லால் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பாகிஸ்தானுடன் மோத தயாராகும் இந்திய கிரிக்கெட் அணி
டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 10 - 15 ஓவர்கள் வீசும்போது, எப்படி விக்கெட்டுகளை எடுக்க முடியும் என்ற நுணுக்கத்தை உம்ரான் மாலிக் கற்றுக் கொள்வார். பந்தை ஸ்விங் செய்யாமல், விக்கெட் எடுக்கமால் அதிவேகமாக பந்துவீசுவதில் எந்த பயனும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் நிச்சயமாக அவரை டி20 அணியில் சேர்த்திருக்க மாட்டேன் எனவும் மதன்லால் குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR