ICC T20 World Cup 2024 In Tamil: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் லீக் தொடரின் 17ஆவது சீசன் நாடு முழுவதும் உள்ள 13 நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் மோதும் இந்த டி20 திருவிழா, ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் நடைபெறுவதால் இம்முறை அதிக எதிர்பார்ப்பு ஐபிஎல் மீது எழுந்துள்ளது. எந்த வருடமெல்லாம் டி20 உலகக் கோப்பை நடக்கிறதா அதற்கு ஐபிஎல் தொடர் நடைபெறும்.
எனவே, டி20 உலகக் கோப்பைக்கு நீங்கள் தகுதிபெற வேண்டுமெனில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, 2022ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் டி20 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றிருந்தார்.
எப்போது இந்திய அணி அறிவிக்கப்படும்...?
இந்த முறையும் நடப்பு ஐபிஎல் தொடர் (IPL 2024) வரும் மே 26ஆம் தேதி நிறைவடையும் நிலையில், ஜூன் 1ஆம் தேதி ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. இதில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்னும் தேர்வு செய்யப்படாத நிலையில் நடப்பு ஏப்ரல் மாத கடைசியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் கூறப்படுகிறது.
இந்திய டி20 அணி கடந்த இரு ஆண்டுகளாகவே உருப்பெற்று வந்தாலும், நடப்பு சீசனில் பார்மில் இருப்பவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படலாம். மேலும் ஒவ்வொரு கிரிக்கெட் வல்லுநர்களும் இந்திய அணிக்கான வீரர்களை பரிந்துரை செய்து வருகின்றனர். குறிப்பாக, யாரை அணியில் சேர்க்க வேண்டும் என்பது மட்டுமின்றி யாருக்கு வாய்ப்பில்லை என்பதும் அவர்களின் பரிந்துரை மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இந்த 3 பேர் அவசிய தேவை
அந்த வகையில், இந்திய அணியின் மூத்த வீரர் வெங்கடேஷ் பிரசாத் அவரது X பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நேற்றிரவு போட்ட அந்த பதிவில்,"சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிவம் தூபே கொண்டுள்ள அதிரடி திறனுக்காக அவர் இருப்பார். சிறந்த டி20 சர்வதேச பேட்டர் என்பதால் சூர்யகுமார் யாதவ் இருப்பார். ரிங்கு சிங் அவரது விதிவிலக்கான ஃபினிஷிங் திறனுக்காக அணியில் இருப்பார்.
Shivam Dube for his striking ability against spinners, Surya for being the best T20 international batter and Rinku Singh for his exceptional finishing ability. It will be great if India finds a way to have these 3 in the 11 in the T20 WC. With Virat and Rohit , this will leave…
— Venkatesh Prasad (@venkateshprasad) April 8, 2024
டி20 உலகக்கோப்பையில் பிளேயிங் பேரில் இந்த 3 பேரையும் காம்பினேஷனுக்குள் இந்தியா கொண்டுவர ஒரு வழியைக் கண்டடைந்தால் நன்றாக இருக்கும். விராட் மற்றும் ரோஹித் அணியில் இருக்கும்பட்சத்தில் இன்னும ஒரு கீப்பர் பேட்ஸ்மேனுக்கு மட்டுமே இடம் இருக்கும். இது எப்படி செல்கிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார். இதில் கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பெயர் இல்லை.
இவர்களுக்கு வாய்ப்பு குறைவு
அதாவது, கே.எல். ராகுல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்றாலும் அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் கேள்விக்குறியாக உள்ளது. இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா ஆகியோரிடையேவே அதிக போட்டி இருக்கும் சூழலில், ரிஷப் பண்ட் நிச்சயம் அணியில் இடம்பிடிப்பார் என கூறப்படுவதால் இவர்களே அணியில் பேக்-அப்பாகதான் இருப்பார்கள். எனவே, ராகுலுக்கு இடமளிக்க வாய்ப்பில்லை.
மிடில் ஆர்டரில், சூர்யகுமார், சிவம் தூபே, ரிங்கு சிங், ரிஷப் பண்ட் ஆகியோர் இருக்கும்போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு தற்போதைய சூழலில் வாய்ப்பே இல்லை எனலாம். ஆனால், ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு பலம் சேர்ப்பார். அவர் பந்துவீசும்பட்சத்தில் இந்திய அணிக்கு கூடுதல் சிறப்பு. இன்றைய சூழலில், ஜித்தேஷ் சர்மா, கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் ஆகியோருக்கு டி20 உலகக் கோப்பைக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ