’ரன் அடிக்கிறதே இல்லை.. இவர ஏன் எடுக்கிறாங்க?’ கொல்கத்தா வீரரை விளாசிய கவாஸ்கர்

எந்தவொரு ஐபிஎல் போட்டியிலும் நன்றாக விளையாடாத இவரை ஏன் ஏலத்தில் எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை என கொல்கத்தா இளம் வீரரை கடுமையாக சாடியிருக்கிறார் சுனில் கவாஸ்கர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 7, 2023, 10:31 AM IST
  • கொல்கத்தா அணி அபார வெற்றி
  • இளம் வீரர் மீது கவாஸ்கர் காட்டம்
  • ஏன் இவரை தொடர்ந்து எடுக்கிறார்கள்?
’ரன் அடிக்கிறதே இல்லை.. இவர ஏன் எடுக்கிறாங்க?’ கொல்கத்தா வீரரை விளாசிய கவாஸ்கர் title=

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023-ன் 9வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அபராமாக விளையாடி ஆர்சிபி அணியை தோற்கடித்தது. இந்த போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றிருந்தாலும், அந்த அணியில் டக் ஆவுட் ஆன இளம் வீரர் மன்தீப் சிங்கை கடுமையாக விளாசியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.

கொல்கத்தா அபாரம்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை கொடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் 89 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தபோது, 120 ரன்களையாவது எட்டினால்போதும் என அந்த அணியினர் நினைதுக் கொண்டிருந்தனர். ஆனால், ஆர்சிபி அணி என்ன நினைத்ததோ தெரியவில்லை. அதன்பிறகு ரன்களை வாரி வழங்க தொடங்கினர்.

மேலும் படிக்க | IPL 2023: ஆர்சிபி படுதோல்வி... புள்ளிப்பட்டியலில் கேகேஆர் 4ஆம் இடம்!

வாண வேடிக்கை காட்டிய ஷர்துல்

முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திவிட்டதால் பலமான அணி, இந்த முறை ஆர்சிபிக்கே கோப்பை என பலரும் புகழ ஆரம்பித்ததால், ராயல் சேலஞ்சர்ஸ் அணியினரும் இந்த சின்ன ஸ்கோரை சேஸ் செய்தால் நமக்கு அசிங்கம். அதனால் இன்னும் கொஞ்சம் அடித்து சவாலான ஸ்கோரை கொல்கத்தா நிர்ணயிக்கட்டும் என்ற நிலையில் பந்துகளை வீசத் தொடங்கினர். இதனால், களத்தில் இருந்த ஷர்துல் தாக்கூர் மற்றும் ரின்கு சிங் இருவரும் கொல்கத்தா பந்துவீச்சை மைதானம் முழுவதும் சிதறடித்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 204 ரன்கள் எடுத்தது. ஷர்துல் 29 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். 

ஆர்சிபி அணி தோல்வி

பின்னர் சேஸிங் இறங்கிய ஆர்சிபி அணியினர் வாண வேடிக்கை காட்டலாம் என அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், நடந்தது வேறு. முதல் விக்கெட்டுக்கு கோலியும், டூப்பிளசிஸூம் அதிரடி காட்டினாலும், அடுத்து வந்த வீரர்கள் எல்லாம் சீக்கிரம் பெவிலியனுக்கு திரும்புவதிலேயே குறியாக இருந்தனர். இளம் சுழற்பந்துவீச்சாளர்களான வருண் சக்ரவர்த்தி மற்றும் சுயாஷ், நரைன் ஆகியோரின் சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தனர். கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சுனில் கவாஸ்கர் காட்டம்

வெற்றி பெற்ற கொல்கத்தா அணிக்கு பாராட்டு தெரிவித்த கவாஸ்கர், அந்த அணியின் இளம் வீரரான மன்தீப் சிங்கை கடுமையாக விளாசியிருக்கிறார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத மன்தீப் சிங் ஆர்சிபி அணிக்கு எதிராகவும் டக் அவுட்டாகியிருக்கிறார். ஆனால் அவரை ஐபில் அணிகள் தவறாமல் ஏலம் எடுத்துக் கொண்டே இருக்கின்றன. அவரும் ஆண்டுக்கு ஆண்டு வெவ்வேறு அணிகளில் விளையாடிக் கொண்டே தான் இருக்கிறார். இதெப்படி என தெரியவில்லை? என காட்டமாக சாடியிருக்கிறார். இதனால் அவருக்கு அடுத்த போட்டியில் கொல்கத்தா அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

மேலும் படிக்க | ஐபிஎல் அணிகளில் யாருக்கு அதிக ரசிகர்கள்...? இதோ முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News