இதுவரை இல்லாத அளவில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி மிகவும் மோசமாக விளையாடி முதல்முறையாக ப்ளே ஆப்பிற்கி செல்லாமல் வெளியேறியது. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் தற்போது மீண்டும் தொடங்க உள்ளது. கொடோனா தொற்று காரணமாக வெளிநாட்டு வீரர்கள் தற்போது தங்களது அணிக்கு திரும்புவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி எந்தவித சிக்கலுமின்றி தற்போது ஐக்கிய அமீரகத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் தற்போது சிஎஸ்கே அணியில் விளையாட உள்ளார். தற்போது உள்ள அணிகளின் வீரர்களை மதிப்பிடும்போது சிஎஸ்கே மிகவும் பலமாக உள்ளது.
இதுவரை நடந்த 2021 ஐபிஎல் போட்டிகளில் பாப் டூ ப்ளசி மற்றும் ருட்ராஜ் கைகுவாட் சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக விளையாடி வருகின்றனர். சிஎஸ்கே அணியின் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியில் டூ பிளசி 320 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதன் காரணமாக ராபின் உத்தப்பா விற்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பலம் பொருந்தியதாக உள்ளது. 3 மற்றும் 4-வது இடங்களில் சுரேஷ் ரெய்னா மற்றும் மொயின் அலி ஆடி வருகின்றனர். அதன்பிறகு அம்பத்தி ராயுடு, எம்எஸ் தோனி விளையாடி வருகின்றனர். 2018,19 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எம்எஸ்தோனி தற்போது ரன்களை அடிக்க தடுமாறி வருகிறார். இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் ஓரளவிற்கு ரன்கள் அடித்தாலும் இன்னும் பலமாக எழுந்து வர வேண்டிய தேவை உள்ளது.
ALSO READ IPL 2021: அணி வீரர்களை மாற்றிய ஆர்.சி.பி, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
மற்ற அணிகளை விட சிஎஸ்கே அணியில் தான் 4 சிறந்த ஆல்ரவுண்டர் உள்ளனர். மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, சாம்கரன், ட்வைன் பிராவோ என உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் அனைவரும் சிஎஸ்கே அணியில் உள்ளனர். பவுலிங்கில் கலக்கி வரும் ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சஹர் என இருவருமே பேட்டிங் செய்ய கூடிய திறமை கொண்டவர்கள். இம்ரான் தாகிர், சான்ட்னர், பிராவோ என இவர்களில் ஒருவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. ரன்களை வாரி வழங்கி வரும் லுங்கி நிகிடிக்கு பதிலாக ஹேசல்வுட் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் உத்தப்பா மற்றும் புஜாரா அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQY