எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, UAE-ல் தங்களது கட்டாய ஆறு நாள் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்து விட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2021) 14 வது சீசனின் இரண்டாம் கட்டம் துவங்க உள்ள நிலையில், CSK அணி தங்களது முதல் பயிற்சி அமர்வைத் துவக்கியது.
இதற்கிடையில், நெட் பயிற்சியின் போது, எம்.எஸ். தோனி (MS Dhoni) பந்தை அனாயாசமாக அடிப்பதைக் காண முடிந்தது. இது கண்டிப்பாக மற்ற அணிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருந்திருக்கும். வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோவில், தோனி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவது காணக்கிடைத்தது. சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ். தோனி, மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடினார்.
தோனியின் நெட் பயிற்சியின் வீடியோ உங்கள் பார்வைக்கு:
MS Dhoni Starts practice at the nets at ICC Academy#IPL2021 #Dhoni #MSD #MSDhoni #WhistlePodu #Raina #IPL #ENGvIND pic.twitter.com/FluBhWijU2
— Crisilin Babu (@Crisilin_Tweet) August 19, 2021
குறிப்பிடத்தக்க வகையில், கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் 2021 (IPL 2021) போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்படுவதற்கு முன்பு சிஎஸ்கே அணி, புள்ளிகள் அட்டவணையில் இரண்டாவது இடத்தில் இருந்தது. இது தற்போது தொடங்கவிருக்கும் இரண்டாம் கட்ட போட்டிகளில், CSK வீரர்களுக்கு நல்ல நம்பிக்கையை அளிக்கும்.
ALSO READ: IPL 2021 புதுமையான ஹேர் ஸ்டைல்: ஸ்டைலில் கலக்கும் தல தோனி
முன்னதாக வெள்ளிக்கிழமையன்று, சிஎஸ்கே தனது ரசிகர்களுக்காக ஒரு வீடியோவை பகிர்ந்தது. அணியின் முதல் நெட் பயிற்சியின் வீடியோவைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Day Training from the house!#WhistlePodu #Yellove pic.twitter.com/1WBUaCPd4K
— Chennai Super Kings - Mask Pdu Whistle Pdu! (@ChennaiIPL) August 20, 2021
இந்தியாவில் கோவிட் -19 தொற்றுநோயின் வீரியம் அதிகம் ஆனதால், இந்த ஆண்டு மே மாதம் நடந்துகொண்டிருந்த ஐபிஎல் 2021 ஒத்திவைக்கப்பட்டது. இப்போது இது, செப்டம்பர் 19 ஆம் தேதி துபாயில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான பிளாக்பஸ்டர் மோதலுடன் மீண்டும் தொடங்கும்.
இந்த போட்டிக்குப் பிறகு, அடுத்த போட்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையில் அபு தாபியில் நடக்கும்.
செப்டம்பர் 24 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சாலெஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி ஷார்ஜாவில் நடக்கும். மொத்தமாக 13 போட்டிகள் துபாயிலும், 10 ஷார்ஜாவிலும், 8 போட்டிகள் அபுதாபியிலும் நடைபெறும்.
ஐ.பி.எல். 2021 பாதுகாப்பாக நடத்தப்படுவதை உறுதி செய்ய, பிசிசிஐ (BCCI) 46 பக்க சுகாதார நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதில், பிசிசிஐ, இந்த போட்டிகளின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக ஐபிஎல் உடன் தொடர்புடைய அனைவரும் பின்பற்ற வேண்டிய அனைத்து குறிப்புகளையும் வகுத்துள்ளது.
ALSO READ: Beer விளம்பரத்தில் MS Dhoni: பிராண்ட் பெயரில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட், ஜெர்சி எண் 7
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR