இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி பரபரப்பாக கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் 1 செஷன் மட்டுமே போட்டி நடைபெற்ற நிலையில், அடுத்த இரண்டு நாட்கள் மழையின் காரணமாக நடைபெறவில்லை. இதனையடுத்து நான்காவது நாள் போட்டி வழக்கம் போல தொடங்கியது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இந்திய அணி வெறும் 34.4 ஓவரில் 285 ரன்கள் அடித்து டிக்லர் செய்தது. இந்திய அணியின் இந்த அசுர ஆட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் வங்கதேசம் 26 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது. இதனால் ஐந்தாம் நாளான இன்று போட்டி இன்னும் பரபரப்பாக மாறி உள்ளது.
மேலும் படிக்க | வங்கதேச டி20 தொடரில் 'வேகப்புயல்' மயங்க் யாதவுக்கு வாய்ப்பு - இந்திய அணி அறிவிப்பு
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திங்கள் மாலை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியில் இருந்து மூன்று முக்கிய வீரர்களை விடுவித்துள்ளது. மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையே இரானி கோப்பை 2024 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இந்திய அணியில் இருந்து சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். "லக்னோவில் நாளை தொடங்க உள்ள #IraniCupல் பங்கேற்க இந்திய டெஸ்ட் அணியில் இருந்து சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்," என்று பிசிசிஐ X தளத்தில் பதிவிட்டுள்ளது.
Update: Sarfaraz Khan, Dhruv Jurel and Yash Dayal have been released from India's Test squad to participate in the #IraniCup, scheduled to commence tomorrow in Lucknow. pic.twitter.com/E0AsPuIVYX
— BCCI (@BCCI) September 30, 2024
லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று முதல் வரும் 5ம் தேதி வரை இரானி கோப்பை 2024 நடைபெற உள்ளது. இந்த போட்டியில் அஜிங்க்யா ரஹானே மும்பை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே சமயம் ருதுராஜ் கெய்க்வாட் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார். வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரல் மற்றும் யாஷ் தயாள் பிளெயிங் 11ல் இடம் பெறாததால் அவர்கள் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இணைந்துள்ளனர். அதேபோல், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இடம் பெறாத சர்பராஸ் கான் மும்பை அணியை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.
இரானி கோப்பை அணிகள்
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி: ருதுராஜ் கெய்க்வாட் (C), அபிமன்யு ஈஸ்வரன் (WC), சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (WC)*, இஷான் கிஷன் (WC), மானவ் சுதர், சரண்ஷ் ஜெயின், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார், யாஷ் தயாள் *, ரிக்கி புய், ஷஷ்வத் ராவத், கலீல் அகமது, ராகுல் சாஹர்
மும்பை அணி: அஜிங்க்யா ரஹானே (C), ப்ரித்வி ஷா, சர்பராஸ் கான்*, ஆயுஷ் மத்ரே, ஷ்ரேயாஸ் ஐயர், சித்தேஷ் லாட், சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஹர்திக் தாமோர் (WC), சித்தான்த் அதாத்ராவ் (WC), ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், ஹிமான்சு சிங், ஷர்துல் தாக்கூர், மோஹித் அவஸ்தி, முகமது ஜூனேட் கான், ராய்ஸ்டன் டயஸ்.
மேலும் படிக்க | Ruturaj Gaikwad: தொடர்ந்து ஓரம் கட்டப்படும் ருதுராஜ் கெய்க்வாட்! இதுதான் காரணமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ