ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: நேரடி ஒளிபரப்பு மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்!

Champions Trophy | பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் நேரடி ஒளிபரப்பு குறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 15, 2025, 01:34 PM IST
  • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள்
  • இந்தியாவில் எந்த சேனலில் லைவ்வாக பார்க்கலாம்
  • தொலைக்காட்சி, ஜியோ ஹாட்ஸ்டார் விவரங்கள்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: நேரடி ஒளிபரப்பு மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்! title=

Champions Trophy live streaming | பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்களின் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நேரடி ஒளிபரப்பு மற்றும் ரேடியோ ஒளிபரப்பு விவரங்களை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த போட்டிகள் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறும். இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும்ழ 15 போட்டிகள் நடக்க உள்ளன. இதில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுகிறது. இலங்கை அணி  விளையாடவில்லை. பிப்ரவரி 19 ஆம் தேதி நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் தற்போதைய சாம்பியன் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.  

இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங்:

இந்தியாவில், ஜியோஸ்டார் நெட்வொர்க் சாம்பியன்ஸ் டிராபியை ஒளிபரப்பும். ஜியோ ஹாட்ஸ்டார் மூலம் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் 16 வெவ்வேறு ஃபீட்கள் மூலம் நேரடி ஸ்ட்ரீமிங் வழங்க உள்ளது. இதில் 9 மொழிகளில், அதாவது ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, ஹரியான்வி, வங்காளம், போஜ்பூரி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 

டெலிவிஷனில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் நெட்வொர்க் 18 சேனல்கள் மூலம் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் ஒளிபரப்பு நடைபெறும்.

பிற நாடுகளில் ஒளிபரப்பு விவரங்கள்:
 
பாகிஸ்தான்: PTV மற்றும் Ten Sports (ஸ்ட்ரீமிங்: Myco மற்றும் Tamasha ஆப்).

யுஏஇ: CricLife Max மற்றும் CricLife Max2 (ஸ்ட்ரீமிங்: STARZPLAY).

யுனைடெட் கிங்டம்: Sky Sports Cricket, Sky Sports Main Event, Sky Sports Action (ஸ்ட்ரீமிங்: SkyGO, NOW மற்றும் Sky Sports ஆப்).

அமெரிக்கா மற்றும் கனடா: WillowTV (ஸ்ட்ரீமிங்: Willow by Cricbuzz ஆப், ஹிந்தி ஒளிபரப்பும் உண்டு).

கரீபியன்: ESPNCaribbean (ஸ்ட்ரீமிங்: ESPN Play Caribbean ஆப்).

ஆஸ்திரேலியா: PrimeVideo (ஹிந்தி ஒளிபரப்பும் உண்டு).

நியூசிலாந்து: Sky Sport NZ (ஸ்ட்ரீமிங்: Now மற்றும் SkyGo ஆப்).

தென்னாப்பிரிக்கா : SuperSport மற்றும் SuperSport ஆப்.

வங்காளதேசம்: Nagorik TV மற்றும் T Sports (ஸ்ட்ரீமிங்: Toffee ஆப்).

ஆப்கானிஸ்தான்: ATN.

இலங்கை: Maharaja TV (TV1), ஸ்ட்ரீமிங்: Sirasa.

ரேடியோ ஒளிபரப்பு:

இந்தியா: All India Radio.

பாகிஸ்தான்: HUM 106.2FM.

யுஏஇ: Talk 100.3FM மற்றும் Big 106.2.

வங்காளதேசம்: Radio Shadhin 92.4 மற்றும் Radio Bhumi 92.8.

இலங்கை: Lakhanda Radio.

யுனைடெட் கிங்டம்: BBC Radio 5 Sports Extra.

இந்த போட்டிகளை உற்சாகத்துடன் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு, மேலே உள்ள ஒளிபரப்பு விவரங்கள் உதவியாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபி 2025-ன் ஒவ்வொரு போட்டியும் உங்கள் தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட்போன்களில் பார்த்து ரசிக்கவும்..

மேலும் படிக்க  | IPL 2025: பும்ரா வருவது கஷ்டம்... முன்னாள் CSK வீரரை தேடிச்செல்லும் மும்பை அணி?

மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபியை தொடரை வென்றால் எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News