உதயநிதி ஸ்டாலின் ரூ. 25 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும்! தயாரிப்பாளரால் ஏற்பட்ட சிக்கல்!

உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘ஏஞ்சல்’ படத்தை முழுவதும் நடித்து தராததால் தயாரிப்பாளர் 25 கோடி நஷ்ட ஈடு வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 /6

அரசியலுக்கு வருவதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் படங்களில் தீவிரமாக நடித்து வந்தார். பின்பு முழு நேர அரசியல்வாதியாக தன்னை மாற்றி கொண்டார்.

2 /6

அவரது நடிப்பில் கடைசியாக மாமன்னன் படம் வெளியானது. ஆனால் அந்த படத்திற்கு முன்பே 2018ம் ஆண்டு கே.எஸ்.அத்தியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

3 /6

ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பு 80% நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை என்றும் தயாரிப்பாளர் ராம் சரவணன் குற்றம்சாட்டி உள்ளார்.

4 /6

மீதமுள்ள 20% படப்பிடிப்பு நடக்காததால் என்னக்கு அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ராம் சரவணன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

5 /6

உதயநிதி படப்பிடிப்பை மீண்டும் என்னுடைய படத்தில் நடித்து முடித்து கொடுக்க வேண்டும், இல்லை என்றால் அவரால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ரூ.25 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.  

6 /6

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி தயாரிப்பாளர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தள்ளுபடி செய்தார். ஆனால், தயாரிப்பாளர் தற்போது இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்குமாறு உதயநிதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.