விசாகப்பட்டனத்தில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இலங்கை வீரர் உபுல் தராங்கா-வின் விக்கெட்டினை டோனி வீழ்த்திய வீடியோ இனையித்தில் தற்போது அணைவராலும் தேடப்பட்டு வருகிறது.
முன்னதாக நடைப்பெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் தல ஒரு போட்டிகளை வென்றுள்ளன. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி தொடரை கைப்பற்றும்!
இதனால் இரு அணிகளும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று நடைப்பெறும் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை துவங்கிய இலங்கை அணி ஆரம்பத்திலே முதல் விக்கெட்டை இழந்தபோதிலும். துவக்க ஆட்டக்காரர் உபுல் தராங்கா அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். 82 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து சதத்தினை நோக்கி நகர்ந்தார்.
ஆனால் அவரது கனவை தகர்க்கும் வகையில் டோனி, ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றினார். இதனையடுத்து களமிரங்கிய வீரர்களும் தடுமாறி வருகின்றனர்.
இதனால் இலங்கை அணி தற்போதைய நிலவரப்படி, 39 ஓவர்கள் முடிய 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. தனசெழியா 0(0) மற்றும் குனரத்னே 13(33) ரன்களுடன் களத்தில் உள்ளனர்