இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து மூத்த வீரர்களான அஜிங்கிய ரஹானே மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மோசமான ஃபார்ம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருவருக்கும் தேர்வுக்குழுவினர் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால், இருவரின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல், ரஹானேவை சீண்டியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக்.
மேலும் படிக்க | ’கால்பந்து உலகில் பூகம்பம்’ மெஸ்ஸி பற்றி மாடல் வெளியிட்ட ரகசியம்
ரஹானே மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரை இந்திய அணிக்கு தேர்வு செய்யாத தேர்வுக்குழுவினரின் முடிவை அவர் வரவேற்றுள்ளார். ரஹானே மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோருக்கு வயதாகிவிட்டதாக தெரிவித்துள்ள அவர், அவர்கள் இருவருக்கும் பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் பிரசித் கிருஷ்ணாவுக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பிராட் ஹாக் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரேயாஸ் அய்யர் சிறந்த பேட்ஸ்மேன் என தெரிவித்துள்ள பிராட் ஹாக், எதிர்காலத்தில் இந்திய அணிக்கு அதிக போட்டிகளில் விளையாடக்கூடிய ஆற்றல் அவரிடம் இருப்பதாக பெருமிதமாக தெரிவித்துள்ளார். பிராட் ஹாக்கின் இந்தப் பேட்டி ரஹானேவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் தொடர்ந்து பார்ம்அவுட்டில் தவிக்கும் ரஹானே, அதில் இருந்து மீளுவதற்கு எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை.
புஜராராவுக்கான இந்திய அணி இடம் கேள்விக்குறியானவுடன் ஐபிஎல் தொடரை புறக்கணித்த அவர், கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்ததுடன், டெஸ்ட் அணிக்கும் திரும்பியுள்ளார். அப்படியான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஐபிஎல் போட்டியில் விளையாடி மோசமான ஃபார்மை பட்டவர்த்தனமாக காட்டினார் ரஹானே. இப்போது காயமடைந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அவர், விரைவில் நிரந்தர ஓய்வெடுத்தாலும் வியப்பில்லை என்கின்றனர் கிரிக்கெட் நிபுணர்கள்.
மேலும் படிக்க | சாதனை பெண்! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் Mithali Raj
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR