SRH விடுவிக்கும் முக்கிய வீரர்கள்... வெறிகொண்டு காத்திருக்கும் CSK - காவ்யா மாறனின் திட்டம் என்ன?

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விடுவிக்கும் முக்கிய வீரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம். அதில் ஒரு வீரரை தூக்க சிஎஸ்கே அணி வெறிகொண்டு காத்திருக்கிறது எனலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 8, 2024, 12:06 PM IST
  • சன்ரைசர்ஸ் அணி நிச்சயம் 4-5 வீரர்களை ஏலத்திற்கு முன் தக்கவைக்க வாய்ப்புள்ளது.
  • பெரும்பாலும் 3 வெளிநாட்டு வீரர்களை சன்ரைசர்ஸ் அணி தக்கவைக்கும்.
  • சன்ரைசர்ஸ் அணி கடந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறியது.
SRH விடுவிக்கும் முக்கிய வீரர்கள்... வெறிகொண்டு காத்திருக்கும் CSK - காவ்யா மாறனின் திட்டம் என்ன? title=

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான விதிகள், அணிகள் வீரர்களை தக்கவைப்பதற்கான விதிகள் ஆகியவை கடந்த செப். 28ஆம் தேதி பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டது. கடந்த 2022 மெகா ஏலத்தை ஒப்பிடும்போது எக்கச்சக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, RTM முறை மீண்டும் முக்கிய மாற்றத்திற்கு உட்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது, Uncapped வீரர்களுக்கான விதியும் மாற்றத்துடன் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த மெகா ஏலத்தில் ரூ. 90 கோடியாக இருந்த ஏலத்தொகை தற்போது ரூ.120 கோடியாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், வீரர்கள் ஏலத்திற்கு வரும்போது அவர்களுக்கான அடிப்படை தொகையும் ஓரளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஏலத்தில் நான்கு வீரர்களை தக்கவைக்க வாய்ப்பிருந்தது. ஆனால் தற்போது 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த முறை நான்கு வீரர்களில் அதிகபட்சம் மூன்று இந்திய வீரர்களையும், இரண்டு வெளிநாட்டு வீரர்களையும் தக்கவைக்கலாம் என விதி இருந்தது. ஆனால் இந்த முறை எந்த வீரரை வேண்டுமானாலும் நீங்கள் தக்கவைக்கலாம், ஆனால் ஒரு அணி கண்டிப்பாக ஒரு Uncapped வீரரை தக்கவைக்க வேண்டும். ஏலத்திற்கு முன்னரும் வீரர்களை தக்கவைக்கலாம், ஏலத்தில் RTM பயன்படுத்தியும் நீங்கள் வீரர்களை மீண்டும் அணிக்குள் கொண்டுவரலாம்.

அணிகளுக்கு பிசிசிஐ வைத்த ஆப்பு

தற்போது வெளிநாட்டு வீரர்கள், இந்திய வீரர்கள் என்றில்லாமல் எந்த வீரரை வேண்டுமானாலும் தக்கவைக்கலாம் என்றாலும் அதிலும் பெரிய ஆப்பு ஒன்று பிசிசிஐ வைத்துள்ளது. முதல் ஸ்லாட்டுக்கு ரூ.18 கோடி, 2வது ஸ்லாட்டுக்கு ரூ. 14 கோடி, 3வது ஸ்லாட்டுக்கு ரூ.11 கோடி என ஒதுக்கீடு செய்திருக்கிறது. இதில் என்ன இருக்கிறது என கேட்கிறீர்களா... இதற்கு பிறகுதான் ட்விஸ்ட்டே இருக்கிறது. 4வது ஸ்லாட்டுக்கும் ரூ.18 கோடி, 5வது ஸ்லாட்டுக்கும் ரூ.14 கோடி என பெரிய ஷாக்கை அளித்துள்ளது. உங்களுக்கு நிச்சயம் ஆறு வீரர்களை தக்கவைக்க வேண்டும் என்றால் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து தக்கவையுங்கள், இல்லையெனில் ஏலத்திற்கு விடுவித்து முடிந்தால் RTM மூலம் தக்கவைத்துக்கொள்ளுங்கள் என பிசிசிஐ இந்த விதியை கொண்டுவந்துள்ளது. இதில் 6வது ஸ்லாட் Uncapped வீரர்களுக்கானது. அதற்கு ரூ.4 கோடி ஒதுக்கீடாகி உள்ளது.

மேலும் படிக்க | IPL 2025: ஐபிஎல் 2025ல் தோனி விளையாடினால் சம்பளம் இவ்வளவு தானா?

புதிய RTM விதி

RTM மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிலும் பெரிய மாற்றம் உள்ளது. உதாரணத்திற்கு சிஎஸ்கே (Chennai Super Kings) ரச்சின் ரவீந்திராவை ஏலத்திற்கு விடுவிக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். இவர் மெகா ஏலத்தில் மும்பை அணியால் ரூ. 8 கோடிக்கு ஏலம் எடுக்கப்படுகிறார். இப்போது சிஎஸ்கே RTM கார்டை பயன்படுத்தினால், மும்பை அணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இப்போது மும்பை ரூ.12 கோடி என விலையை உயர்த்தும்பட்சத்தில், சிஎஸ்கே அந்த தொகைக்கு ஒப்புக்கொண்டால் ரச்சினை எடுத்துக்கொள்ளலாம். சிஎஸ்கே மறுத்துவிட்டால் மும்பை அணி அந்த ரூ.12 கோடிக்கு ரச்சினை தூக்கிவிடும். எனவே, இந்த கடுமையான விதிமுறைகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மட்டுமே ஏலத்திற்கு முன்பு பல முன்னணி வீரர்களை தக்கவைக்கும் வாய்ப்புள்ளது. 

எஸ்ஆர்ஹெச் யாரை தக்கவைக்கும்?

பாட் கம்மின்ஸ் (ரூ.18 கோடி), ஹென்ரிச் கிளாசென் (ரூ.14 கோடி), அபிஷேக் சர்மா (ரூ. 11 கோடி), டிராவிஸ் ஹெட் (ரூ.18 கோடி) மேலும் அப்துல் சமத்தை Uncapped வீரராக தக்கவைக்கலாம். ஏலத்திற்கு முன்னரே சன்ரைசர்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைக்கும்பட்சத்தில் ஏலத்தின்போது ஒரு RTM கார்டுதான் கிடைக்கும். அதில் நிதிஷ் குமார் ரெட்டி, நடராஜன் உள்ளிட்டோரில் ஒருவரை எடுக்கும். மற்றொருவர் நிச்சயம் வெளியேறுவார். சுமார் ரூ.65 கோடியை ஏலத்திற்கு முன்னரே சன்ரைசர்ஸ் செலவழித்துவிடும். ஏலத்திற்கு கையில் ரூ.55 கோடியே இருக்கும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். 

ஏலத்திற்கு வரும் முக்கிய வீரர்கள்

அந்த வகையில், எஸ்ஆர்ஹெச் அணியின் முன்னாள் கேப்டன் எய்டன் மார்க்ரம், கிளென் பிலிப்ஸ், மார்கோ, யான்சன், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக் உள்ளிட்ட முக்கிய வீரர்களை தக்கவைக்க முடியாது. இருப்பினும் இவர்களை ஏலத்தில் கடும் போட்டிகளுக்கு மத்தியில் எடுக்கலாம். ஒருவேளை நடராஜன் ஏலத்திற்கு வந்தால் சிஎஸ்கே அவரை தூக்க எந்த எல்லைக்கும் போகும். காரணம் பதிரானா, நடராஜனின் காம்போ டெத் ஓவர்களில் மிரட்டலாக இருக்கும் என்பதால் நடராஜனுக்கு பெரிய போட்டி இருக்கும் எனலாம். நிதிஷ் குமார் ரெட்டி இந்திய வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பதால் அவரையும் எஸ்ஆர்ஹெச் தக்கவைக்க நினைக்கும். எனவே, ஏல மேசையில் காவ்யா மாறன் என்ன முடிவெடுப்பார், நடராஜனை சிஎஸ்கேவிடம் விட்டுவிடுவாரா அல்லது நிதிஷை தாரை வார்ப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் படிக்க | ஐபிஎல் 2025 மெகா ஏலம்: எங்கு, எப்போது நடக்கிறது...? வெளியான தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News