ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே 1882ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை விளையாடப்படுகிறது. இந்த வருடம் ஆஷஸ் ஆஸ்திரேலியாவில் 2021 டிசம்பரில் தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக இந்த வருடம் ஆஷஸ் தொடர் நடைபெறுமா என்று சந்தேகம் நிலவிய நிலையில் டிசம்பர் 8ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
இந்த தொடர் ஆரம்பிக்கும் முன்பு ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெயின் சில சர்ச்சைகள் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விளக்கினார். இதனால் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் பொறுப்பேற்று கொண்டார். இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் முதல் போட்டியில் இருந்தே ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 275 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆகா வேண்டும் என்ற கட்டாயத்தில் இங்கிலாந்து அணி இருந்தது.
7 wickets for 55 runs in his debut Test
Scott Boland, take a bow #Ashes | #WTC23 pic.twitter.com/KQu5iEEx0U
— ICC (@ICC) December 28, 2021
டிசம்பர் 26ம் தேதி மூன்றாவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரை வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்தது ஆஸ்திரேலியா. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி 267 ரன்கள் அடித்து 82 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து அணியை வெறும் 68 ரன்களில் சுருக்கி இந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடர் ட்ரா ஆனா நிலையில் இந்த வருட தொடரை கைப்பற்றியுள்ளது.ஆஸ்திரேலியா.
ALSO READ | IND vs SA: தென்னாபிரிக்க வீரர்கள் கையில் கருப்பு நிற ஸ்டிக்கர் அணிந்ததற்கான காரணம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR