டி20 உலக கோப்பை குரூப்8 சுற்றில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அமர்களப்படுத்தியிருக்கிறது ஆப்கானிஸ்தான்அணி. லீக் சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான், இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே நடப்பு டி20 உலக கோப்பை தொடருக்கான அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில் களம் கண்டது. அதுமட்டுமல்ல, தங்கள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆட சம்மதித்துவிட்டு, கடைசி நேரத்தில் கேன்சல் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் அந்த காத்துக் கொண்டிருந்தது. அடிப்பட்ட புலி, தனக்கான நொடி நேரத்தையும் வீணாக்காது என்பதற்கு ஏற்ப, ஆஸ்திரேலியாவை போட்டி தொடங்கியது முதலே சவாலாகவே எதிர்கொண்டது ஆப்கானிஸ்தான் அணி.
ஆப்கானிஸ்தான் அணியின் காயம்பட்ட அந்த வெறி பேட்டிங்கில் தெரிந்தது. 13 ஓவர்கள் வரை விக்கெட் இழப்பில்லாமல் 100 ரன்களை எடுத்து என்றால், அந்த அணியின் ஆட்டம் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போதே ஆஸ்திரேலிய அணிக்கு தெரிந்திருக்கும், இப்போட்டி நிச்சயம் நமக்கு கடினமாக இருக்கும் என்று. இருந்தாலும், தங்களுக்கே உரிய கங்காரு மந்திரத்தின்படி, எந்த சூழலிலும் நம்மால் மீண்டு வர முடியும் என்ற அடிப்படையில் பந்துவீசியது ஆஸ்திரேலியா. அதற்கு ஓரளவுக்கு பலன் கிடைத்தது என்றே சொல்லலாம். ஏனென்றால் 180 ரன்களுக்கு மேலாக ஆப்கானிஸ்தான் அணி செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவின் கங்காரு மைன்ட்செட், அவர்களை கம்பேக் கொடுக்க செய்தது. அதனால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆரம்பத்தில் ஆடிய ஆப்கானிஸ்தான் பேட்டிங் இறுதியில் பெரிதாக சோபிக்கவில்லை என்பது உண்மை தான். இருந்தாலும், பேட்டிங்கில் விட்டதை பவுலிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என களமிறங்கியது ஆப்கானிஸ்தான் அணி. இது அந்த அணிக்கு கவுர பிரச்சனையை தீர்க்கும் போட்டி என்பதால், எப்படியும் வெற்றி பெற வேண்டும் என நினைத்தனர் ஆப்கானிஸ்தான் பிளேயர்கள். நிற்க, அந்த பழைய கதை என்ன என்றால், ஆஸ்திரேலிய அணி 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட சம்மதம் தெரிவித்துவிட்டு, பின்னர் அதனை கேன்சல் செய்தது. 2023ல் மூன்று ஒருநாள் போட்டியில் ஆடுவதாக உத்தரவாதம் கொடுத்துவிட்டு, அதனையும் கேன்சல் செய்தது ஆஸ்திரேலியா.
அதாவது ஐசிசி போட்டிகளில் மட்டுமே ஆடுவோம் என்பதை ஆப்கானிஸ்தான் அணிக்கு சொல்லாமல் சொல்லியது. இதில் காயம்பட்டு வெதும்பியிருந்த ஆப்கானிஸ்தான் பிளேயர்கள், பவுலிங்கில் துல்லியமாக தாக்குதலை இன்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் முக்கிய போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வீசினர். இதில் ஆரம்பத்தில் இருந்தே ஆட்டம் காண தொடங்கியது ஆஸ்திரேலியா. இதனால் 20 ஓவர் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் 19.2 ஓவர்களுக்கே 127 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ஆப்கானிஸ்தான் அணியும் 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, பழைய பகையை தீர்த்து, தங்களின் கவுரவத்தையும் காப்பாற்றி, நடப்பு உலக கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டது. அடுத்த போட்டியில் வங்கதேசம் அணியை வீழ்த்தினால், ஆப்கானிஸ்தான் அணி எளிதாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறலாம்.
மேலும் படிக்க | விராட் கோலியை முறைத்த பௌலர்... களத்தில் பதிலடி கொடுத்த ரோஹித் - ஆக்ரோஷ வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ